Jul 1, 2024
சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை போக்கி பொலிவான, பளபளப்பான சருமம் பெற உதவும் Ice Cube ஒன்றினை தயார் செய்து, முறையாக பயன்படுத்துவது எப்படி? என இங்கு காணலாம்!
Image Source: istock
அரிசி மாவு - 2 ஸ்பூன் | தேன் - 2 ஸ்பூன் | உருளைக்கிழங்கு (சிறியது) - 1
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கினை துருவி - சாறு புழிந்து சுமார் 1½ ஸ்பூன் அளவுக்கு எடுத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
இறுதியாக இதனுடன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 1 கப் அளவு சேர்த்து, நன்கு கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இந்த சேர்மத்தை Ice Cube ட்ரேவில் சேர்த்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, உறைய வைக்க ‘கொரியன் Ice Cube’ ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த Ice Cube-னை சருமத்திற்கு தேய்த்து, பின் 5 - 7 நிமிடங்களுக்கு பதமாக மசாஜ் செய்யவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்துவிடவும்!
Image Source: istock
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த Ice Cube பேக் ஆனது, சருமத்தில் காணப்படும் கரும்புள்ளி, வெண்புள்ளிகளை மறைத்து பொலிவான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் இந்த Ice Cube பேக் ஆனது, சரும வறட்சியை போக்கி, மிருதுவான மற்றும் பொலிவான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!