May 9, 2024
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்து பொலிவான, பளபளப்பான சருமம் பெற உதவும் பேஸ் பேக் ஒன்றினை வடித்த சாதம், மஞ்சள் மற்றும் கற்றாழை பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: istock
வடித்த சாதம் - 1 கப் | மஞ்சள் - 2 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 கப்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட வடித்த சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் மஞ்சளுடன் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு கரைத்துக்கொள்ள சரும பொலிவுக்கு உதவும் பேஸ் பேக் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்திற்கு அப்ளை செய்து மிதமாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் வரை உலர விட்டு பின் பதமாக அகற்றிவிடவும்.
Image Source: istock
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த பேக் ஆனது, சருமத்தில் மறைந்திருக்கும் மாசுக்களை நீக்குவதோடு, கரும்புள்ளி பிரச்சனையில் இருந்தும் தீர்வு காண உதவுகிறது.
Image Source: istock
ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட மஞ்சள் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, பருக்கள் உண்டாவதன் வாய்ப்பை குறைத்து, பொலிவான சருமம் பெற உதவுகிறது.
Image Source: istock
சருமத்தில் இயற்கை எண்ணெயை தக்க வைக்கவும் பண்பு கொண்ட கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது சரும வறட்சி பிரச்சனையை போக்குகிறது.
Image Source: pexels-com
சருமம் தளர்வடைவதை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, சருமத்தில் காணப்படும் மென் கோடுகள், சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றம் பெற உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!