Jun 22, 2024
By: Nivethaஇந்த காலக்கட்டத்தில் பலரும் தங்கள் சருமம் மெதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க பல்வேறு அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க சில யோகா ஆசனங்களை செய்யலாம்.
Image Source: pexels
சருமத்தினை வலுப்படுத்தி, முதுமை அறிகுறிகளை குறைக்கவும் சில யோகா தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகிறது. முகத்திற்காக செய்யப்படும் இந்த பயிற்சியில் கண்களை சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பதற்றம் நிதானப்படுத்தப்படும்.
Image Source: istock
இரு கைகளையும் நெற்றியில் வைத்து விரல் நுனியை நடுவில் தொட வேண்டும். இப்படி செய்கையில் விரல் நுனியினை வெளிப்பக்கம் நகர்த்தும் பொழுது சிறிதளவு அழுத்தத்தினை கொடுக்க வேண்டும்.
Image Source: pexels
ஆள்காட்டி விரல்களை புருவத்தின் கீழ் வைத்து அழுத்த வேண்டும், அந்த அழுத்தத்தை எதிர்க்கும் பொழுது கண்களை மூட முயற்சிப்பது போல சுருக்க வேண்டும். இந்த நிலையினை சில நொடிகள் நீடிக்க வைத்து பின்னர் விடுவிக்கவும். இதனை பலமுறை செய்யலாம்.
Image Source: pexels
வாயை 'ஓ' வடிவத்தில் வைத்து முடிந்தளவு அகலமாக சிரிக்க முயற்சிக்க வேண்டும். சில வினாடிகள் பிறகு ஓய்வெடுக்கலாம். இப்படி செய்வதால் கன்னங்களிலுள்ள தசைகள் தொனிக்க உதவும், இதனை பலமுறை செய்ய வேண்டும்.
Image Source: istock
நேராக அமர்ந்து தலையை பின்னால் சாய்த்து மேல்நோக்கி பார்க்க செய்யவும். பின்னர் முத்தமிட முயற்சிப்பது போல் உதடுகளை பிதுக்க வேண்டும். சில வினாடிகளுக்கு பின்னர் ஓய்வெடுக்கலாம். இது உங்கள் கழுத்து பகுதி மற்றும் கன்னத்தின் பகுதியிலுள்ள தசைகள் இறுக உதவும்.
Image Source: pexels
தலையை பின்னால் சாய்த்து கூரையை நோக்கி பார்த்து கீழ் தாடையை முன்னோக்கி நகர்த்தி சில நொடிகள் அப்படியே இருக்கவும். இப்படி செய்வதால் தாடையிலுள்ள தசைகள் உறுதிப்பெறும்.
Image Source: pexels
இந்த யோகா தொழில்நுட்பங்கள் வயது முதிர்வால் ஏற்படும் சரும சுருக்கங்கள், மெல்லிய கோடுகள், வீக்கம் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
Image Source: pexels
யோகா தொழில்நுட்பங்கள் பின்பற்றுவதோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் சருமத்தின் துவாரங்கள் திறக்கப்பட்டு வியர்வை வழியே அழுக்குகள் வெளியேறி இயற்கையான அழகை பெறலாம்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!