Aug 13, 2024
சரும ஆரோக்கியம் காக்கும் ஊட்டங்கள் பல நிறைந்து காணப்படும் அதிமதுரப் பொடியை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது? பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
அதிமதுரத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளை (சுருக்கம், மென் கோடுகள்) போக்க உதவுகிறது.
Image Source: pexels-com
அதிமதுரம், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது. இது அதிக மெலனின் உற்பத்தி செய்யும் திறனை தடுக்கிறது. சரும நிறத்தை சீராக்குகிறது.
Image Source: istock
அதிமதுரத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதில் கிளைசிரைசின் என்ற பொருள் உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கிறது.
Image Source: istock
அதிமதுரத்தில் இயற்கையாகவே ரெட்டினால் காணப்படுகிறது. இது சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. இதன் சரும செல்களை எதிர்த்து போராடும் பண்புகள் இயற்கை பொலிவை பெற உதவுகிறது!
Image Source: istock
சருமத்தில் அழற்சி காரணமாக ஏற்படும் சரும சிவத்தல், அரிப்பு இவற்றை நீக்குகிறது. அதிமதுரத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்க முடியும்.
Image Source: istock
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சரும புள்ளிகள் போன்றவற்றை போக்க முடியும். இது எலாஸ்டின் மற்றும் கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமம் மென்மையாகவும் இறுக்கமாகவும் இருக்க உதவுகிறது.
Image Source: istock
எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் துளைகளை அடைக்கும் போது முகப்பருக்கள் ஏற்படலாம். இது எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி முகப்பருக்களை குறைக்கிறது.
Image Source: istock
அதிமதுரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காயங்கள் மற்றும் தொற்றுக்களை குறைக்கிறது. சருமத்தில் பாக்டீரியாக்களின் உற்பத்தியை குறைத்து தொற்றுக்களை போக்குகிறது. மேலும், சருமத்தில் காணப்படும் வடுக்களை குறைக்கிறது!
Image Source: istock
Thanks For Reading!