Aug 16, 2024
ரோஸ் ஜெல் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும். இதை வீட்டிலேயே தயாரிப்பது மிக எளிது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.
Image Source: istock
1 கப் ப்ரஷ்ஷான ரோஜா இதழ்கள், 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், சில துளிகள் விட்டமின் ஈ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத ரோஜா இதழ்களாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கழுவி உலர வையுங்கள்.
Image Source: istock
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் ரோஜா இதழ்களை போட்டு கொதிக்க வையுங்கள். அதன் சாறு இறங்கும் வரை ஆற விட வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது ரோஸ் வாட்டரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக கலக்குங்கள்.
Image Source: istock
இதனுடன் சில துளிகள் விட்டமின் ஈ எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
இந்த ரோஸ் ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்து மெதுவாக 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
Image Source: pexels-com
இந்த ஜெல்லை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள். இது சருமத்தை பிரகாசமாகவும் ஆரோக்கியமான பளபளப்பையும் கொடுக்கிறது.
Image Source: istock
ரோஜா இதழ்கள் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டுமே சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!