Aug 21, 2024
உளுத்தம் மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை கொடுக்கிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தின் நிறத்தை சமன் செய்து கரும்புள்ளிகளை குறைத்து, சருமத்தை பளபளப்பாக்கும்.
Image Source: istock
உளுத்தம் மாவில் இருக்கும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகத்தில் பருக்கள் வராமல் தடுத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தின் அதிகளவு எண்ணெய் பசையை நீக்கி, முகம் பொலிவாக மாற பெரும் பங்கு வகிக்கிறது.
Image Source: istock
உளுத்தம் மாவு கொண்டு நமது சருமத்தை சுத்தம் செய்யும் நிலையில், முகத்திலிருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் குறைய துவங்கும். தொடர்ந்து இந்த மாவை முகத்தில் தடவி வந்தால் படிப்படியாக நிறம் சீராக மாறும், சருமமும் தெளிவாகும்.
Image Source: istock
மஞ்சளில் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள் நிறைந்துள்ளன. இதனை நாம் சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் உள்ளிருந்து பளபளப்பினை கொடுப்பதோடு, பருக்களை குறைத்து, நிறத்தை மேம்படுத்தி கொடுக்க கூடியது.
Image Source: istock
2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு எடுத்து கொள்ளுங்கள், அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் ஆகியவற்றை சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தின் கரும்புள்ளிகளை குறைத்து, பளபளப்பினை ஏற்படுத்தும்.
Image Source: istock
2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவோடு 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் வீக்கத்தை குறைத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து ஒளிர செய்யும்.
Image Source: istock
2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, அந்த கலவையை 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பொலிவினை கொடுத்து ஒளிர செய்யும்.
Image Source: istock
உளுத்தம் மாவினை நம்முள் பலர் இயற்கையான ஸ்க்ரப் என்றும் குறிப்பிடுவார்கள். ஏனெனில், இது சருமத்தில் தடவி நன்கு மசாஜ் செய்வதன் மூலம் அனைத்து அழுக்குகள், டெட் செல்களை நீக்குகிறது. அதிகளவு எண்ணெய் படிவதையும் தடுக்கிறது.
Image Source: pexels
ஒவ்வொரு சருமம் மாறுபடக்கூடியது, எனவே எதனை நமது சருமத்தில் புதிதாக பயன்படுத்துவதற்கு முன்னரும் பேட்ச் டெஸ்ட் செய்து. ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அப்பொருளை உங்கள் சருமத்தில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: istock
Thanks For Reading!