Jun 20, 2024
அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாக சர்க்கரை நோய் பார்க்கப்படும் நிலையில், இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உதவுமா? இல்லையா? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி வைட்டமின் சி ஆனது குளுக்கோஸ் எதிர்வினைகளை மாற்ற உதவுகிறது. அந்த வகையில் இரத்த சர்க்கரை அளவை மேலாண்மை செய்து நீரிழிவு நோயாளிகளின் நலன் காக்க உதவுகிறது.
Image Source: istock
வைட்டமின் சி நுகர்வு ஆனது தாதுக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. மேலும், இன்சுலின் உணர்திறனை மேலாண்மை செய்கிறது. அந்த வகையில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
Image Source: pexels-com
ஆய்வுகளின் படி நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனைகளை தடுக்க இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது!
Image Source: istock
வைட்டமின் சி ஆனது அதன் நோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் இந்த வைட்டமின் சி நுகர்வு ஆனது, சர்க்கரை நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை காப்பதோடு, கிருமி தொற்றுக்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது!
Image Source: istock
நீரிழிவு பிரச்சனைக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கும் நிலையில், இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியம் காத்து, நீரிழிவு நோயாளிகளின் நலன் காக்கிறது!
Image Source: istock
வைட்டமின் சி நிறைந்த உணவுகளின் நுகர்வு ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், இந்த வைட்டமின் சி புற்றுநோய் உண்டாவதன் வாய்ப்புகளையும் குறைக்க உதவும்.
Image Source: istock
இன்சுலின் உணர்திறனை மேலாண்மை செய்யும் இந்த வைட்டமின் சி ஆனது, உணவுக்கு பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Image Source: istock
தனி நபரின் உடல் நிலை மற்றும் இரத்த சர்க்கரை அளவு பொறுத்து அவர்களுக்கான வைட்டமின் சி தேவை மாறுபடுகிறது. எனவே, உங்கள் உடல் நல ஆலோசகரின் பரிந்துரையின் படி வைட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!