May 14, 2024
லவங்கப்பட்டை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மசாலா பொருள். ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இந்த லவங்கபட்டையின் நுகர்வால் சர்க்கரை நோயாளிகள் பெறும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
லவங்கப்பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகளை குறைத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் அபாயம் குறைகிறது.
Image Source: istock
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கால்சியம் நார்ச்சத்து மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்து இந்த லவங்கப்பட்டையில் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுகிறது.
Image Source: istock
இந்த லவங்கப்பட்டை உடலில் இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்க பெரிதும் உதவுகிறது. இன்சுலின் ஹார்மோன்கள், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உடலுக்கு ஆற்றல் கிடைக்க லவங்கப்பட்டையை சாப்பிட்டு வரலாம்.
Image Source: pexels-com
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க லவங்கப்பட்டை சாப்பிட்டு வரலாம். இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
Image Source: istock
லவங்கப்பட்டையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும். ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 கிராம் லவங்கப்பட்டை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் காக்கலாம்!
Image Source: istock
இன்ஃப்ளுயன்சா மற்றும் டெங்கு கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்க லவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது. இதை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Image Source: istock
அஜீரண கோளாறுகள் வாந்தி குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவுகிறது. நம் வீடுகளில் சமைக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் லவங்கப்பட்டையை சேர்ப்பதற்கான காரணம் இதுதான்.
Image Source: istock
லவங்கப்பட்டையின் நுகர்வு சர்க்கரை நோயாளிகளுக்கு பல வகையில் உதவும் நிலையிலும், உணவு வழக்கத்தில் இந்த லவங்கப்பட்டை சேர்ப்பதற்கு முன், உங்கள் மருத்துவரின் பரிந்துரை பெறுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!