Aug 10, 2024
உலர்ந்த முருங்கை இலையில் தயாரிக்கப்பட்ட முருங்கை பவுடரில், ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திட பெரும் உதவுகிறது. அதனை தினசரி உணவில் எப்படி சேர்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
முருங்கை பவுடரை, நீங்கள் காலையில் குடிக்கும் ஸ்மூத்தியில் சேர்த்து பருக செய்யலாம். அவை ஸ்மூத்தியின் சுவையை கூட்டுவதோடு ஆரோக்கியமானதாக மாற்றக்கூடும்
Image Source: pexels-com
சூடு தண்ணீரில் முருங்கை பவுடரை சேர்த்து தேநீராக அருந்த செய்யலாம். தினமும் முருங்கை டீயை குடித்து வருவது, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பராமரிக்கக்கூடும்
Image Source: istock
நீங்கள் சாப்பிடும் சாலட் மீது முருங்கை பொடியை தூவ செய்யலாம். அவை உணவின் சுவையை மாற்றாமலே ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கக்கூடும்
Image Source: istock
நீங்கள் பவுடராக சாப்பிட விரும்பவில்லை என்றால், மோரிங்கா சப்ளிமெண்ட் கூட சில கடைகளில் விற்பனை செய்யப்படக்கூடும். அதனை வாங்கி தினமும் சாப்பிட செய்யலாம்
Image Source: istock
பிரட், மஃபின் போன்ற பேக்கிங் செய்முறையில் முருங்கை பவுடரை கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம். இது தினசரி உணவில் முருங்கையை சேர்த்திட எளிய வழியாகும்
Image Source: istock
தினசரி சாப்பிடும் தயிரில் 1 டீஸ்பூன் முருங்கை பவுடரை சேர்க்க வேண்டும். இந்த காம்பினேஷன் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சிறந்த மிட் டே ஸ்நாக்ஸாக இருக்கக்கூடும்
Image Source: istock
தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வின் படி, முருங்கை பவுடரில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கூடிய தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது
Image Source: istock
உடலில் ரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைத்திட, முருங்கை இலை உதவி புரிகிறது. அதற்காக, அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அவை எதிர்மறையான விளைவுகளையும் உண்டாக்க செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!