[ad_1] சர்க்கரை நோயாளிகளுக்கு multigrain மாவு - நல்லதா? கெட்டதா?

Jul 3, 2024

சர்க்கரை நோயாளிகளுக்கு multigrain மாவு - நல்லதா? கெட்டதா?

mukesh M

Multigrain மாவு என்றால்?

Multigrain மாவு எனப்படுவது கோதுமா, ராகி, சோளம், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்ற பல தானியங்களை சேர்த்து - அரைத்து உண்டாக்கப்படும் மாவு ஆகும்!

Image Source: istock

சர்க்கரை நோயாளிகளுக்கு Multigrain?

குறைந்தளவு கிளைசெமிக் குறியீடு (GI) கொண்ட இந்த Multigrain மாவு - நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா? இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுமா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

நிபுணர்கள் கூற்றுப்படி குறைந்தளவு GI கொண்ட இந்த Multigrain மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு எற்ற ஒரு உணவு பொருள் ஆகும். இருப்பினும், இந்த மாவினை சர்க்கரை நோயாளிகள் முறையாக எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.

Image Source: pexels-com

சர்க்கரை அளவை குறைக்குமா?

ஆய்வுகளின் படி இந்த மல்டி கிரைன் மாவின் நுகர்வு ஆனது, இரத்த சர்க்கரை அளவை மேலாண்மை செய்ய உதவுகிறது. அந்த வகையில் உணவுக்கு பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது!

Image Source: istock

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்!

Multigrain மாவின் நுகர்வு ஆனது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் இது, நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் இதய ஆரோக்கிய பிரச்சனை, உடல் பருமன் பிரச்சனைகளை தடுக்கிறது!

Image Source: istock

சரி, எப்படி எடுத்துக்கொள்வது?

நிபுணர்கள் கூற்றுப்படி இந்த Multigrain மாவினை மைதா (அ) முழுதானிய மாவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். எனவே, மற்ற மாவுகளின் கலப்பில்லாமல் எடுத்துக்கொள்வது அவசியம்!

Image Source: istock

எண்ணெய் சேர்க்க கூடாது!

ஆய்வுகளின் படி இந்த Multigrain மாவினை எண்ணெய் சேர்க்காமல் எடுத்துக்கொள்ளும் போது அதன் GI அளவு 45.61-ஆகவும், அதேநேரம் எண்ணெய் சேரக்கும் போது 61.41-க்கு மேலாகவும் செல்கிறது. எனவே, இந்த Multigrain மாவினை எண்ணெய் சேர்க்காமல் எடுத்துக்கொள்வதே நல்லது!

Image Source: istock

எவ்வளவு உட்கொள்ளலாம்!

தனி நபரின் உடல் நிலை மற்றும் இரத்த சர்க்கரை அளவு பொறுத்து அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய Multigrain மாவின் அளவு மாறுபடுகிறது. எனவே, உங்கள் உடல் நல ஆலோசகரின் பரிந்துரை படி இந்த மாவினை முறையாக எடுத்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

எச்சரிக்கை!

Multigrain மாவின் முறையற்ற நுகர்வு இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு IBD/IBS போன்ற குடல் சார் பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது. எனவே, நிபுணர் வழிகாட்டுதல் படி இதனை முறையாக எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள்!

Image Source: istock

Thanks For Reading!

Next: பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

[ad_2]