May 14, 2024
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டங்கள் காணப்படும் நிலையில், இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
பச்சை பட்டாணியில் 59 சதவிகிதம் கலோரி நிறைந்திருப்பதோடு, நமது உடலுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் நிறைந்த ஒரு நல்ல உணவு ஆதாரமாகும்.
Image Source: istock
பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் ஆரோக்கியம், செரிமானமின்மை, ஆரோக்கியமான இதயம், நோய் எதிர்ப்பாற்றல், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் போன்று பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன.
Image Source: istock
பச்சை பட்டாணியில் காணப்படும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அந்த வகையில் இது நீரிழிவு நோயாளிகளின் நலன் காக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது!
Image Source: istock
100 கிராம் பட்டாணியில் 80-க்கும் குறைவான கலோரிகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எடையை நிர்வகிக்க இது உதவுகிறது. குறிப்பாக, வகை - 2 நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன் பிரச்சனையை இது தடுக்கிறது!
Image Source: pexels-com
நார்ச்சத்து நிரம்பிய உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த பச்சை பட்டாணியில் காணப்படும் நார்ச்சத்து ஆனது, நீரிழிவு நோயாளிகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது!
Image Source: istock
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. அந்த வகையில் பொட்டாசியம் நிறைந்த இந்த பச்சை பட்டாணி; நீரிழிவு நோயாளிகளின் நலன் காக்க உதவுகிறது!
Image Source: istock
பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, இரும்பு சத்து போன்றவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களை நிர்வாகிக்க உதவுகிறது.
Image Source: istock
பச்சை பட்டாணிகள் பல வகைகளில் இன்று சந்தைகளில் கிடைக்கிறது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது பச்சை பட்டாணி. மற்றோன்று ஸ்னோ பீஸ், இது அவரைக்காய் வடிவில் உள்ள பச்சைப்பட்டாணி. வழக்கமான பச்சை பட்டாணி போன்றே இதுவும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது!
Image Source: istock
Thanks For Reading!