Aug 5, 2024
காலையில் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, வாரத்தில் ஏழு நாட்களுக்கு என்ன மாதிரியான உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
பாசிப்பருப்பு சீலா, குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. அதிலுள்ள காய்கறிகள் மற்றும் மூலிகை கலவைகள், உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது
Image Source: istock
வழக்கமான இட்லிக்கு ஆரோக்கியமான மாற்றாக ஓட்ஸ் இட்லி திகழ்கிறது. ஓட்ஸ் மற்றும் ரவை காம்பினேஷனில் தயாராகும் இந்த இட்லியில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கக்கூடும்
Image Source: istock
வெஜிடபிள் உப்புமா, சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். ரவை, காய்கறி கலவை, கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த உணவானது, குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது
Image Source: istock
சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதமாக ராகி தோசை திகழ்கிறது. ராகி மாவில் காணப்படும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை சிறந்த முறையில் பராமரிக்க உதவக்கூடும்
Image Source: istock
கொண்டைக்கடலை மாவு மற்றும் நறுக்கிய காய்கறி கலவையில் தயாராகும் இந்த உணவு, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும். அதில் புரோட்டீன் நிறைந்திருப்பதால் தசை வலிமைக்கும் பலன் அளிக்கும்
Image Source: istock
முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை மற்றும் நறுக்கிய காய்கறி கலவையில் தயார் செய்யப்படும் இந்த சால்ட், ஆரோக்கியமான காலை உணவாகும். இதில் புரோட்டீன் அதிகமாகவும், கார்ப்ஸ் உள்ளடக்கம் குறைவாகவும் காணப்படும்
Image Source: istock
இது குஜராத்தின் பராம்பரிய உணவாகும். கோதுமை மாவு, வெந்தய கீரை மற்றும் மலாசா பொருட்கள் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. இது அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் கொண்டிருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்
Image Source: istock
இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள ஆரோக்கியமான காலை உணவுகளை, வாரத்தில் 7 நாட்களும் தவறாமல் பின்பற்றி வந்தால் நிச்சயம் சுகர் அளவை கட்டுக்குள் வைத்திட முடியும்.
Image Source: istock
Thanks For Reading!