Aug 13, 2024
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 99 ரன்களில் ஆட்டமிழந்து ‘நூலிழையில்’ சதத்தை தவற விட்ட இந்தியர்கள் ஒரு சிலர் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
டிசம்பர் 27, 1984 அன்று The Oval மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 111 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்.
Image Source: twitter-com
நவம்பர் 9, 2002 அன்று நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் VVS லக்ஷ்மன் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்!
Image Source: twitter-com
மார்ச் 13, 2004 அன்று கராச்சி மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட ராகுல் டிராவிட் 99(104) ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்!
Image Source: twitter-com
ஜூன் 26, 2007 அன்று Belfast மைதானத்தில் நடைப்பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 99 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார்!
Image Source: twitter-com
இதே 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் நாள், Bristol மைதானத்தில் நடைப்பெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது முறையாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார்!
Image Source: twitter-com
மீண்டும் ஒருமுறை என 2007-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளில் 99 ரன்கள் குவித்து 3-வது முறையாக சதத்தை தவறவிட்டார்!
Image Source: twitter-com
நவம்பர் 24, 2013 அன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விராட் கோலி, 99(100) ரன்களில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார்.
Image Source: twitter-com
ஜனவரி 23, 2016 அன்று Sydney மைதானத்தில் நடைப்பெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்களை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா, 108 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்!
Image Source: twitter-com
Thanks For Reading!