Jul 17, 2024
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை கேப்டனகா செயல்பட்ட வீரர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்!
Image Source: twitter-com
டி20 போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் பாபர் ஆசாம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மொத்தம் 85 சர்வதேச டி20 போட்டிகளில் வழி நடத்தியுள்ளார். இதில் 48 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்!
Image Source: twitter-com
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச், தங்கள் நாட்டின் டி20 அணியை 76 சர்வதேச போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். இதில் 40 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்.
Image Source: twitter-com
நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் (ஜூலை 17, 2024 வரையில்) மொத்தம் 75 சர்வதேச டி20 போட்டிகளில் தனது அணியை கேப்டனாக வழிநடத்தி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மொத்தம் 72 T20I போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 41 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
Image Source: twitter-com
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எயின் மோர்கன், மொத்தம் 72 போட்டிகளில் தங்கள் நாட்டு டி20 அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 42 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்.
Image Source: twitter-com
மலேசிய கிரிக்கெட் அணியின் வீரர் அஹ்மத் ஃபைஸ்; (ஜூலை 17, 2024 வரையில்) மொத்தம் 67 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 39 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்.
Image Source: twitter-com
ருவாண்டா கிரிக்கெட் அணியின் வீரர் கிளிண்டன் ருபாகுமியா; (ஜூலை 17, 2024 வரையில்) மொத்தம் 66 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 15 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் (டி20) அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா மொத்தம் 62 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 49 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்!
Image Source: twitter-com
Thanks For Reading!