[ad_1] சாகச பிரியர்களுக்கு சொர்க்கம்.. அந்தமானில் மிஸ் செய்யக்கூடாத விஷயங்கள்!

Aug 21, 2024

சாகச பிரியர்களுக்கு சொர்க்கம்.. அந்தமானில் மிஸ் செய்யக்கூடாத விஷயங்கள்!

Anoj, Samayam Tamil

பாராசெயிலிங்

அந்தமானில் நார்த் பே கடற்கரை பாராசெயிலிங் சாகசத்திற்கு ஏற்ற இடமாகும். நீங்கள் வானில் பறந்தப்படி தீவின் ஒட்டுமொத்த அழகை கண்டு ரசித்திட முடியும்

Image Source: pexels-com

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் சாகசத்திற்கு சிறந்த இடமாக அந்தமானின் ஹேவ்லாக் தீவு திகழ்கிறது. தீவை சுற்றியுள்ள தண்ணீரில் வண்ணமையமான பாறைகள் மற்றும் மீன்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை ஸ்கூபா டைவிங்கில் கண்டு ரசிக்கலாம்

Image Source: pexels-com

கடலுக்குள் நடக்கலாம்

அந்தமானின் நீல் தீவில் கடலுக்கு அடியில் நடப்பது சாத்தியமாகும். ஸ்கூபா டைவிங் மாதிரி நீச்சல் அடிக்க வேண்டிய தேவை இருக்காது. கடலில் நடந்தப்படியே வண்ணமையமான மீன்கள் மற்றும் பவளபாறைகளை காணலாம்

Image Source: facebook-com/9andaman9

ஜெட் ஸ்கியிங்

அந்தமானில் உள்ள எலிபன்ட் தீவில் ஜெட் ஸ்கியிங் சாகசத்தில் ஈடுபடலாம். இந்தியாவில் மற்ற எந்த இடங்களில் இத்தகைய அனுபவத்தை உங்களால் பெற முடியாது. கடல் அலைகளில் சவாரி செய்வது மிகவும் த்ரில்லிங்காக இருக்கக்கூடும்

Image Source: pexels-com

ஸ்நோர்கெலிங்

அந்தமான் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரை, சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க சிறந்த இடமாகும். இதுதவிர, கடலுக்குள் சென்று நீர்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கவும் பிரபலமான இடமாக திகழ்கிறது. பிற இடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் ஸ்நோர்கெலிங் சாகசத்தில் ஈடுபடலாம்

Image Source: pexels-com

பனானா படகு சவாரி

அந்தமானின் வடக்கு பே தீவில் பனானா படகு சவாரியில் நண்பர்களுடன் ஈடுபட செய்யலாம். சாகசத்தை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும். ஸ்பீடு படகு உங்களை இழுத்து செல்வது மிகவும் த்ரில்லிங்காக இருக்கக்கூடும்

Image Source: facebook-com/people/anna-maria-banana-boat-rides

காயாகிங்

அந்தமானின் மாயாபண்டரில் உள்ள பசுமையான சதுப்புநில காடுகளுக்கு இடையே காயாகிங் செல்லும் வாய்ப்பு உள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் இயற்கை அழகை ரசித்தப்படி நீங்கள் பயணிக்க செய்யலாம்

Image Source: pexels-com

டால்பின் கிளாஸ் பாட்டம் படகு

நீரில் இறங்குவதற்கு விரும்பாதவர்கள், போர்ட் பிளேரில் இந்த டால்பின் கிளாஸ் பாட்டம் படகு சவாரியை முயற்சிக்கலாம். இதிலிருக்கும் கண்ணாடி தளம் வாயிலாக பவளபாறைகள் மற்றும் மீன்களை மிக அருகில் காண முடியும். இது குழந்தைகளுடன் செல்வதற்கு ஏற்ற இடமாகும்

Image Source: facebook-com

ட்ரெக்கிங்

நீர் சாகசத்தை தாண்டி அந்தமானில் ட்ரெக்கிங் பயணமும் சாத்தியம் ஆகும். தீவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ஹாரியட் மலையின் காடு வழியாக ட்ரெக்கிங்கில் ஈடுபடலாம். இனிமையான காலநிலையை அனுபவிக்க அக்டோபர் மாதத்தில் செல்லலாம்

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: நெடுஞ்சாலை நடுவே அரளி செடி வளர்க்க காரணம் என்ன ?

[ad_2]