[ad_1] சாக்லேட்டை காலை உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Jun 25, 2024

சாக்லேட்டை காலை உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Nivetha

​சாக்லேட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சாக்லேட்டை காலை உணவாக எடுத்து கொண்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை தான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

Image Source: istock

வைட்டமின்கள்

சாக்லேட்டில் நாம் நினைக்கும்படி வெறும் இனிப்பு சுவை மட்டும் இருப்பதில்லை. அதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Image Source: istock

இதயம்

காலையில் சாக்லேட் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இது அறிவுசார் செயல்பாட்டினையும் அதிகரிக்க செய்கிறது.

Image Source: istock

சரியான அளவு

சாக்லேட்டில் அதிகளவு வைட்டமின்கள் ஏ.சி,ஈ போன்றவை நிறைந்துள்ளது. எனவே இதனை சரியான அளவுடன் தினமும் காலையில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்டவற்றையும் பெறலாம்.

Image Source: istock

மனநிலை மாற்றம்

நமது மனநிலையை மாற்றக்கூடிய பண்புகள் சாக்லேட்க்கு உள்ளது. செரோடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை இது வெளியிடுவதால் காலை உணவாக சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் நல்லப்படியாக போகும் என்று கூறுகிறார்கள்.

Image Source: pexels

செல்கள் சேதமடைவதை தடுக்கிறது

சாக்லேட்டில் பிளேவனாய்ட்கள் அதிகமுள்ளது, இது ஆன்டி-ஆக்சிடென்டுகளாக செயல்பட்ட செல்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது.

Image Source: pixabay

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் அது வயிறு நிரம்பிய உணர்வை தரும் என்பதால், அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது கட்டுப்படுத்தப்பட்டு எடை குறைப்பிலும் பங்கு வகிக்கும்.

Image Source: istock

​மாரடைப்பு அபாயம்

தினமும் காலையில் சாக்லேட் சாப்பிடுவதால் இருதய தமனிகள் நெகிழ்வடைவதோடு, கோக்கோவில் இருக்கும் ஊட்டச்சத்து ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

Image Source: istock

தாவர அடிப்படை உணவுகளுடன் சாக்லேட்

பழங்கள், விதைகள் உள்ளிட்ட தாவர அடிப்படை உணவுகளோடு சாக்லேட் சாப்பிட்டால் அதன் கொழுப்பு உள்ளடக்கத்திற்கு மிகவும் நல்லது. சாக்லேட்டில் உள்ள மெக்னீசியம் தசைகளை தளர்த்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: தினமும் 'வெள்ளை எள் விதைகள்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

[ad_2]