Aug 10, 2024
BY: Anoj, Samayam Tamilகருணைக்கிழங்கில் மங்கனீஸ, பொட்டாசியம், இரும்பு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதனை பயன்படுத்தி எப்படி சுவையான தொக்கு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
கருணைக்கிழங்கு - கால் கிலோ; துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்; இஞ்சி - சிறிதளவு; பூண்டு - 4 பற்கள்; மஞ்சள் - 1 டீஸ்பூன்; புளி - நெல்லிக்காய் சைஸ்
Image Source: istock
சீரகம் - 2 டீஸ்பூன்; வெந்தயம் - 1 டீஸ்பூன்; சின்ன வெங்காயம் - 10; சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப
Image Source: istock
முதலில் கருணைக்கிழங்கை நன்றாக கழுவி, வேகவைக்கவும். பின் தோலை நீக்கி நன்றாக மசித்துகொள்ளவும்
Image Source: istock
இப்போது கடாயில் வெறுமனே துவரம் பருப்பு, சீரகம், வெந்தயத்தை சேர்த்து வறுக்க வேண்டும். அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துகொள்ளவும்
Image Source: istock
அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி போட்டு தாளிக்கவும்
Image Source: pexels-com
இதற்கிடையில், புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து புளிக்கரைசலை ரெடி செய்து, கலவையில் சேர்க்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, சாம்பார் பொடி, மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான நெருப்பில் கிளற வேண்டும்
Image Source: instagram-com/rags_saltnpalette
சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். இந்த கருணைக்கிழங்கு தொக்கை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கக்கூடும்
Image Source: instagram-com/indranarayan
Thanks For Reading!