May 14, 2024
By: Anojநம் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால், ஊட்டச்சத்து சமநிலையை சீர்குலைக்கும் விஷயங்களில் நம்மை அறியாமலேயே நாம் ஈடுபடுகிறோம். அதனைப் பற்றி காணலாம்.
Image Source: istock
பலருக்கும் சாப்பிட்டு முடித்த உடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது வயிற்றில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சுரப்பை குறைக்கிறது. இதனால் அமிலத்தன்மை, வீக்கம் ஏற்பட்டு செரிமான பிரச்சினை உண்டாக்குகிறது
Image Source: pexels-com
சாப்பிட்ட பின் டீ,காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றோடு விட்டுவிடுங்கள். காரணம் இதில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள் உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. சாப்பிட்ட ஒருமணி நேரம் கழித்து காபி, டீ பருகலாம்.
Image Source: istock
சிலர் சாப்பிடும்போது வயிற்றில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க பெல்ட்டை தளர்வாக இருக்கும்படி செய்வார்கள். அப்படி செய்வது அதிகமாக சாப்பிட வழிவகுக்கும். அதேபோல் பெல்ட்டை இறுக்கமாக அணிவது செரிமானம் மற்றும் இரைப்பை செயல்முறையில் பாதிப்பை உண்டாக்குகிறது.
Image Source: istock
சாப்பிட்டு முடித்த பிறகு செரிமானத்துக்கு நம்மில் பலரும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வோம். பழங்கள் ஆரோக்கியமானது என்றாலும் உணவுக்குப் பின் எடுப்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்தி செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
Image Source: istock
சாப்பிட்டவுடன் இருக்கிற இடத்திலேயே பலரும் தூக்கத்தை போடுவோம். இது ஒரு தீய பழக்கம். சாப்பிட்ட உடன் தூங்கும்போது நெஞ்செரிச்சல் பிரச்சினை ஏற்படுகிறது. இது முழு செரிமானத்தையும் பாதிக்கிறது.
Image Source: istock
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது அறிந்தும் சாப்பிட்ட உடன் புகைக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. இது 10 மடங்கு மோசமானது. சிகரெட்டுகளில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் பெருங்குடல் அழற்சிக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யக்கூடாது. இது வாந்தி, வயிறு வீக்கம், உடல் அசதி, செரிமான பிரச்சினை போன்ற பல பாதிப்புகளை உடலில் உண்டாக்கும். உணவுக்குப் பிறகு செரிமான பிரச்சினையை சரிசெய்ய வஜ்ராசனம் மட்டும் செய்யலாம்.
Image Source: istock
சாப்பிட்ட உடனேயே குளிப்பதால் உடலின் வெப்பநிலையை சீராக்க ரத்தமானது சருமத்திற்கு விரைகிறது. இது செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் உடலானது அசதியடைகிறது.
Image Source: istock
Thanks For Reading!