Aug 14, 2024
By: mukesh Mபரபரப்பான சாலையில் நடந்து செல்லும் போது அசௌகரியங்களை உண்டாக்கும் ஆடை, அணிகலன்கள் என்ன? குறித்து இந்த ஆடைகளை தவிர்ப்பதன் அவசியம் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
சாலையில் நடக்கும் போது (குறிப்பாக, நெரிசலான சாலையில் நடக்கும் போது) இறுக்கமான கால் சட்டை அணிவது உங்கள் வேகத்தை குறைப்பதோடு, நடப்பதில் அசௌகரியத்தையும் உண்டாக்கும்!
Image Source: pexels-com
கூட்டமான இடத்தில் நடக்கும் போது Laces வைத்த ஷூ-க்கள் அணிவதை தவிர்க்கவும். எதிர்பாராத வகையில் ஷூ-வின் Laces அவிழ்ந்தால், அதனை மீண்டும் கட்டவும் முடியாது - அடுத்த அடியை எடுத்து வைக்கவும் முடியாது!
Image Source: pexels-com
பொதுவெளியில் நடக்கும் போது (குறிப்பாக, பயணங்களின் போது) தளர்வான Hoodies அணிவது உங்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். மேலும், உங்கள் உடமைகளை எடுத்து செல்வதிலும் சிரமங்களை ஏற்படுத்தும்!
Image Source: pexels-com
சாலையில் நடக்கும் போது High Heels செருப்புகளை தவிர்ப்பது நல்லது. கூட்டமான சாலையில் நடக்கும் போது இந்த High Heels செருப்புகளை அணிந்துக்கொண்டு வேகமாக நடப்பதும் கடினம், விபத்துகள் ஏதும் இன்றி நடப்பதும் சிரமம்!
Image Source: pexels-com
தரையை துடைக்கும் அளவிற்கு நீளமான Pant-களை அணிவது, சாலையில் தடுக்கி விழுவதற்கு வழிவகுக்கும். மேலும், சாலையில் காணப்படும் மாசுக்கள் காரணமாக, ஆடை விரைவில் அதன் அழகை இழக்கும்!
Image Source: pexels-com
அடர்த்தி குறைவான மெல்லிய ஆடைகளை அணிவது - சாலையில் நடக்கும் போது பறக்க கூடும். முறையான உள்ளாடை அணியவில்லை எனில் அசௌகரிய சூழ்நிலைகள் ஏற்பட கூடும்!
Image Source: pexels-com
சாலையில் நடக்கும் போது அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக அடர் பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற ஆடைகளை அணிவது கூடாது. இந்த நிறங்கள் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும்!
Image Source: pexels-com
விலை உயர்ந்த நகைகள், கை கடிகாரம் போன்ற அணிகலன்களை சாலையில் நடக்கும் போது அணிவது கூடாது; குறிப்பாக கூட்டம் அதிகம் உள்ள இடத்தில். எதிர்பாரா சமயங்களில் இந்த அணிகலன்களை நாம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!
Image Source: pexels-com
Thanks For Reading!