[ad_1] சிகரெட் பிடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா? எப்படி தடுப்பது?

May 16, 2024

சிகரெட் பிடிப்பதால் இத்தனை பிரச்சனை வருமா? எப்படி தடுப்பது?

mukesh M

பற்களை பாதிக்கும் புகையிலை!

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை புகைப்பதால் நம் பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? ஆரோக்கிய பிரச்சனைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

புற்றுநோய்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு - வாய் புற்றுநோயின் மிக முக்கிய காரணமாகும். இந்த புற்றுநோய் ஆனது, வாய் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய சிக்கலுக்கும் வழிவகுக்கிறது.

Image Source: istock

ஈறு நோய்!

ஆய்வுகள் படி சிகெரட் புகைப்பது ஈறு மற்றும் பல்லுறுப்பு நோய் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. ஈறுகளில் உண்டாகும் இந்த பிரச்சனை பற்களின் வரிசைக்கு உதவும் எலும்புகளை சிதைத்து, பற்களின் வரிசையை பாதிக்க கூடும்!

Image Source: istock

ஈறுகளில் அழற்சி?

ஈறு மற்றும் பல்லுறுப்பில் உண்டாகும் நோய்கள் ஈறுகளில் அழற்சி, இரத்த கசிவு, பற்கள் இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்க கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

நிறமாற்றம்!

தொடர்ச்சியான புகையிலை பயன்பாடு ஆனது பற்களின் நிற மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. புகையிலை புகைக்கும் போது பற்களின் மீது படியும் படலங்கள், நிறமாற்றம் மற்றும், நிறமாற்றத்துடன் கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

வாய் துர்நாற்றம்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலையின் தொடர்ச்சியான பயன்பாடு ஆனது, நாவில் உள்ள சுவை மொட்டுக்களை பாதிப்பதோடு வாயில் கிருமி தேக்கத்திற்கு வழிவகுத்து வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது!

Image Source: istock

இப்பிரச்சனைகளை தடுப்பது எப்படி?

சிகரெட் புகைப்பதால் நம் பற்கள் மற்றும் ஈறுகளில் உண்டாகும் பிரச்சனையை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 2 முறை பல் துலக்குங்கள். உணவுக்கு பின் குறைந்தது வாய் கொப்புளிப்பதை உறுதி செய்யுங்கள்!

Image Source: istock

மவுத் வாஷ் பயன்படுத்துங்கள்!

பற்களின் மீது உண்டாகும் கூடுதல் அடுக்கு / படலம் மற்றும் கிருமிகளை போக்க, தினமும் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். இது, பற்களின் நிறமாற்றத்தை தடுப்பதோடு, கிருமி தொற்று அபாயத்தையும் தடுக்கும்.

Image Source: istock

புகையிலைக்கு தடை!

புகையிலை பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்துவது இந்த வாய் வழி ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க உதவும். மேலும், மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு செல்வதும், இந்த பிரச்சனைகளை தவிர்க்க உதவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: தெரியுமா - இந்த Diet எல்லாம் trend-ல இல்லையாம்!

[ad_2]