May 31, 2024
By: mukesh Mசிசேரியனுக்கு பிறகு பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுவது பொதுவான ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் இந்த முதுகு வலிக்கான காரணம் என்ன? இதனை சரி செய்யக்கூடிய வைத்திய முறைகள் என்ன என்று இங்கு காணலாம்.
Image Source: istock
அறுவை சிகிச்சையின் போது தசைகள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் முதுகு வலி ஏற்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது முதுகில் செலுத்தப்படும் மயக்க மருந்து காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தை பிறந்த பிறகும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் தொடருவதால் சிலருக்கு முதுகு வலி போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.
Image Source: istock
சிசேரியனுக்கு பிறகு சிலருக்கு உடல் எடை கூடும் வாய்ப்புகள் அதிகம். கூடுதல் எடை முதுகு தண்டை பாதித்து முதுகு வலியை ஏற்படுத்தலாம். சிசேரியனுக்கு பிறகு உடல் எடையை நிர்வகிக்க உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையோடு மேற்கொள்ளலாம்.
Image Source: istock
வேறு ஏதேனும் உடல் நல பிரச்சனைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளளும் பிரசவத்திற்கு பிறகு முதுகு வலி ஏற்படலாம். எனவே மருத்துவர்கள் கலந்து ஆலோசித்து சரியான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
முதுகில் வலியுள்ள இடங்களில் மசாஜ் செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். இப்போது கடைகளில் கிடைக்கும் ஹாட் மசாஜ் பேக்களை பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது இறுக்கமான தசைகள் தளர்ந்து ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவும்.
Image Source: istock
முதுகு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும் மற்றும் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சி, தியானம், நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
Image Source: istock
தாய்ப்பால் கொடுக்கும் போது அல்லது படுக்கும் போது முறையற்ற தோரணைகள் முதுகுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். உட்காரும்போது வசதியாக இருக்க தலையணைகளை பயன்படுத்துதல், முதுகுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருத்தல் போன்றவை முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
Image Source: istock
தாங்க முடியாத முதுகு வலிகளுக்கு வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். ஆனால் சிசேரியன் செய்திருப்பதால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவிதமான வலி நிவாரணிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!