May 5, 2024
சிசேரியனை விட சுகப்பிரசவம் மிகவும் எளிமையானது என நினைக்கும் கர்ப்பிணி பெண்கள் பலரும் ஆசைப்படுவது சுகப்பிரசவத்திற்கு தான்; ஆனால் சுகப்பிரசவம் அவ்வளவு சுலபமானது இல்லை; சிசேரியனை விட வலி கொண்டது அதிகம் தரக்கூடியது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: istock
குழந்தையை சுற்றி இருக்கும் அம்மோடிக் திரவத்தை தான் நாம் பனிக்குடம் என்கிறோம். பனிக்குடம் உடையும் போது சொட்டு சொட்டாக நீர் வெளியேறக்கூடும். இந்த அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
Image Source: istock
வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து வலி இருக்கலாம். குழந்தையின் தலைப்பகுதி இறங்கி இருக்கும் என்பதால் அடி வயிற்றின் அடிப்பகுதியில் கனமாக தோன்றலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றலாம்.
Image Source: istock
உங்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பிரசவ தேதியை மீறி உங்களுக்கு வலி வரவில்லை என்றால் உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொள்ளலாம்.
Image Source: pexels-com
சிலருக்கு பிரசவ வலி வராமல் கூட போகலாம். பிரசவ வலியை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் வழங்குவார். பிரசவ வலியை ஏற்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
Image Source: istock
ஒருவேளை உங்களுக்கு சிசேரியன் செய்யப் போகிறார்கள் என்றால், முடிந்த அளவுக்கு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி மயக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீர் ஆகாரங்களை உட்கொள்ளலாம்.
Image Source: istock
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறவி. சிசேரியன் என்றாலும், சுகப்பிரசவம் என்றாலும் உங்களுக்கு வலி இருக்கும். ஆனால் உங்கள் குழந்தையை பார்க்கும் போது அது ஒரு பெரிய பொருட்டாக உங்களுக்கு தெரியாது.
Image Source: istock
சுகப்பிரசவம் ஆனவர்கள் ஓரிரு நாளில் சாதாரண நிலைக்கு திரும்பி விடுவார்கள். அதே நேரத்தில் சிசேரியன் செய்த பெண்களுக்கு வலி குணமாக குறைந்தது 5 நாட்கள் ஆகலாம்.
Image Source: istock
சிலருக்கு தாய்ப்பால் உடனே சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு தாய்ப்பாலை பம்ப் செய்து எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதனால் அதற்கு தேவையான உபகரணங்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
Image Source: istock
Thanks For Reading!