[ad_1] சிசேரியன் செய்வதற்கு முன் மருத்துவரிடம் இதைக் கேட்க மறவாதீர்கள்!

சிசேரியன் செய்வதற்கு முன் மருத்துவரிடம் இதைக் கேட்க மறவாதீர்கள்!

May 25, 2024

By: mukesh M

சிசேரியன் செய்யும் முன்!

பிரசவத்திற்கு சிசேரியனை தேர்வு செய்யும் பெண்கள்; பிரசவத்திற்கு முன் தங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்.

Image Source: istock

அறுவை சிகிச்சைக்கு பிறகான ஓய்வு!

சிசேரியன் செய்த பிறகு எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும், டிஸ்சார்ஜ் செய்த பிறகு வீட்டில் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டுமா? என்பதை குறித்து மருத்துவரிடம் கேளுங்கள். உடல் பருமன், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் மறக்காமல் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசியுங்கள்.

Image Source: istock

தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

சிசேரியன் செய்த பிறகு முதுகு பகுதியில் அதிக வலி இருக்கலாம் என்பதால், உங்கள் குழந்தையை நன்றாக தூக்க குறைந்தது இரண்டு நாள் ஆகும். எனவே தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் இருந்தால் மாற்று வழிகள் குறித்து கேட்டுக் கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

உடற்பயிற்சி செய்யலாமா?

வயிற்றில் உள்ள காயங்கள் ஆற சில நாட்கள் ஆகும் என்பதால், இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா? என்பதை பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும். மேலும் வீட்டு வேலைகளையும் செய்வதற்கு நிபந்தனை உள்ளதா? என கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

அனஸ்தீசியா

சிசேரியன் சமயத்தில் முதுகு பகுதியில் அனஸ்தீசியா ஊசி போடப்படுவதால், எதிர்காலத்தில் முதுகு வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

பிரவசத்திற்கு பிந்தைய தாம்பத்தியம்!

பிரசவத்திற்கு பிறகு குறைந்தது 6 வாரங்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுவீர்கள். இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

வடு எப்போதும் மறையும்?

சிசேரியனுக்கு பிறகு அடிவயிற்றில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த வடுக்கள் பெரும்பாலும் மறைவதில்லை என்றாலும் இது குறித்து கேள்விகள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

அடுத்த பிரசவம் சுகப்பிரசவமாக இருக்குமா?

முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தாலும், அடுத்த குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற முடியும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், இதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது எப்படி? என மருத்துவரிடன் ஆலோசித்து அறிவது நல்லது!

Image Source: istock

உடல் எடை அதிகரிக்குமா?

சிசேரியனுக்கு பிறகு ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் மருத்துவரிடம் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்கள் சமையலறையை ‘குளிர்ச்சியாக’ வைக்க உதவும் வழிகள்!

[ad_2]