May 20, 2024
கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பதவி வகித்து, தங்கள் அணியின் சாதனைகளுக்கு வழிவகுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சிலர் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் இம்ரான் கான். 1992-ஆம் ஆண்டு இவரது தலைமையில் தான் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றது!
Image Source: instagram-com
இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை கனவை 193-ஆம் ஆண்டு நினைவாக்கியவர் கபில் தேவ். இவரது காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவர், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்!
Image Source: instagram-com
தனது தனித்துவமான ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சாளர். சுமார் 25 போட்டிகளில் இவர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
Image Source: instagram-com
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் - ஆள் ரவுண்டராக இருந்தவர் ஷான் பொல்லாக். சுமார் 37 போட்டிகளில் அணி தலைவராக செயல்பட்ட இவர், 26.76 சராசரியில் 100 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
Image Source: instagram-com
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் குறிப்பிடத்தக்க பந்துவீச்சாளர். தனது அணியை மொத்தம் 22 போட்டிகளில் வழிநடத்திய இந்த வேகப்பந்து வீச்சாளர்; கேப்டனாக செயல்பட்ட இந்த போட்டிகளில் மட்டும் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்!
Image Source: instagram-com
1971 - 84 காலக்கட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர். சுமார் 18 போட்டிகளில் இவர் தன் நாட்டு அணியை வழிநடத்தியுள்ளார்.
Image Source: instagram-com
2004 -2017 இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் குறிப்பிடத்தக்க பந்துவீச்சாளராக இருந்தவர் டாரென் சமி. இவர், மொத்தமாக 30 போட்டிகளில் தனது நாட்டு அணிக்காக தலைமை தாங்கியுள்ளார்.
Image Source: instagram-com
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர். மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் இவர் பார்க்கப்படுகிறார்.
Image Source: instagram-com
Thanks For Reading!