Jul 2, 2024
யூரிக் அமில தேக்கத்தால் சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை அகற்ற மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய உணவு வழக்கம் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
அறுவை சிகிச்சைக்கு பின்னர் உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். உடலின் நீரேற்றத்தை உறுதி செய்ய நாள் ஒன்றுக்கு 2 - 3 லிட்டர் அளவு தண்ணீர் உள்ளிட்ட நீர் ஆகரம் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்!
Image Source: pexels-com
சிறுநீரக கற்களை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பால் பொருட்களை போதுமான அளவு எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், இதனை தயிர், பால், மோர் போன்ற நீர்த்த வடிவில் எடுத்துக்கொள்வதே நல்லது!
Image Source: istock
அறுவை சிகிச்சைக்கு பின்னர் நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது அவசியம். அதேநேரம் எளிதில் ஜீரணிக்க கூடிய எளிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மாமிசம் போன்ற செரிப்பதற்கு கடினமான மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
நார்ச்சத்து நிறைந்த உணவுகளின் நுகர்வு குடல் இயக்கம் மற்றும் சிறுநீரக பாதை ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் சிறுநீரக கல் அகற்றல் அறுவை சிகிச்சை முடித்த பின் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகையாக இது பார்க்கப்படுகிறது.
Image Source: istock
சிறுநீரக கல் அகற்றல் அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறைந்தது 2 மாதங்களுக்கு கால்சியம், ஆக்சலேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது கூடாது. காரணம், இவை இரண்டும் மீண்டும் சிறுநீரக கல் உண்டாவதற்கு வழிவகுக்கும்!
Image Source: istock
பசலை கீரை, முட்டைக்கோஸ், காலிப்பிளவர், வாழைப்பழம், மாங்காய், ஆப்ரிகாட், நட்ஸ் வகைகள், சோடா போன்றவை கால்சியம், ஆக்சலேட் நிறைந்த உணவு பொருட்கள் ஆகும்.
Image Source: istock
காஃபின் உள்ளடக்கம் நிறைந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் டீ, காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்த்து, இயற்கை வழியில் கிடைக்கும் சாறுகளை பருகலாம்!
Image Source: istock
சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவு பொருட்கள், துரித உணவுகள் போன்றவற்றின் நுகர்வும் மீண்டும் சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பதால், இவற்றை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!