[ad_1] சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருமா?

Jul 10, 2024

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருமா?

mukesh M

சிறுநீரக கற்களும் - புற்றுநோயும்!

சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான புற்றுநோய் வருவதன் வாய்ப்பு அதிகம் என பலரும் நம்பும் நிலையில், இது தொடர்பான உண்மை நிலை குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

சிறுநீரக கல் vs சிறுநீரக புற்றுநோய்!

சிறுநீரக பகுதியில் செல்களின் வளர்ச்சி அசாதாரண நிலையில் இருப்பது சிறுநீரக புற்றுநோய் எனப்படுகிறது. அதேநேரம், சீறுநீரகம் (அ) சிறுநீரக பாதையில் தாது உப்புக்கள் தேங்குவதை சிறுநீரக கற்கள் என்கிறோம்.

Image Source: istock

இரண்டிற்கும் இடையேயான தொடர்பு?

இவ்விரு பிரச்சனைகளுக்குமான காரணங்கள் மாறுபட்ட திசைகளில் பயணிக்கும் நிலையில் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்புகள் இல்லை. இருப்பினும், இந்த சிறுநீரக கற்கள், புற்றுநோய்கான வாய்ப்பை மறைமுகமாக அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Image Source: istock

எப்படி பாதிக்கிறது?

தகவல்கள் படி இந்த சிறுநீரக கற்கள் ஆனது PRCC எனும் பாப்பில்லரி சிறுநீரக செல் கார்சினோமா கட்டிக்கு வழிவகுக்கிறது. சிறுநீரக குழாயில் உண்டாகும் இந்த வீரியம் மிக்க கட்டி, புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கிறது.

Image Source: istock

யூரோதெலியல் கார்சினோமா!

யூரோதெலியல் கார்சினோமா எனப்படுவது சிறுநீரக பாதையில் தொடங்கும் ஒரு புற்றுநோய் வகை ஆகும். ஆய்வுகளின் படி சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிக்குள்ளாகும் நபர்களையே இது அதிகம் பாதிக்கிறது!

Image Source: istock

சிறுநீரக கற்களை அகற்றிய பின் புற்றுநோய்?

அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்களை அகற்றிய பின்னரும் இந்த புற்றுநோய் வரலாம். குறிப்பாக 30 - 40 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு இந்த புற்றுநோயின் அபாயம் சற்று அதிகமாக இருக்க கூடும்!

Image Source: istock

தடுப்பது எப்படி?

சிறுநீரகம் தொடர்பான இந்த புற்றுநோய்களை தடுக்க, சிறுநீரக கற்கள் உண்டாவதன் வாய்ப்புகளை தடுப்பது அவசியம். அந்த வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு வழக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது!

Image Source: istock

போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் மருந்து பரிந்துரைக்கும் உணவு வழக்கதுடன் போதுமான அளவு தண்ணீர் பருகுவது, பழச்சாறு பருகுவது என உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள இந்த சிறுநீரக புற்றுநோயின் வாய்ப்புகளை குறைக்கலாம்!

Image Source: pexels-com

அலட்சியம் கூடாது!

சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் காணும் நபர்கள், இந்த அறிகுறிகளில் அலட்சியம் காட்டாது - உடனடியாக மருத்துவரை சந்தித்து - பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் நோய்கள் என்னென்ன? இதை தடுப்பது எப்படி?

[ad_2]