May 10, 2024
சிறுநீரகம் நமது உடலில் மிக முக்கிய உறுப்பு. இந்த சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மற்ற சில உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், குறிப்பிட்ட அந்த சில பிரச்சனைகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது கீல்வாதம் உங்களை பாதிக்கலாம். இது சிறுநீரகங்கள் சிறுநீரை சரியாக வடிகட்ட முடியாத போது ஏற்படுகிறது. பெரும்பாலும் இது மூட்டுகள் மற்றும் கால் விரல்களை பாதிக்கும்.
Image Source: arthritis
சிறுநீரகப் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ரத்த சோகையினாலும் பாதிக்கப்படுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரக செயல்பாடு குறையும்போது இந்த ரத்த சோகை மேலும் உங்கள் உடல் நிலையை பாதிக்கலாம்.
Image Source: pexels-com
அதிகப்படியான பாஸ்பரஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை சமநிலைப்படுத்த உதவும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது ஹைப்பர் பாஸ்பேட்மியா போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
சிறுநீரகம் செயலிழக்கும் போது இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். டயாலிசிஸ் செய்து கொள்ளும் நபர்களில் பெரும்பாலானோர் இதய நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
சிறுநீரக செயலிழப்பு ரத்தத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை வடிகட்டுவதை தடுக்கிறது. பொட்டாசியத்தின் அளவு நமது உடலில் அதிகரிக்கும் போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Image Source: istock
சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் அடிக்கடி தோல் அரிப்பு ஏற்படுகிறது. அதிக நீர் அருந்துதல், முறையான சரும பராமரிப்பு போன்றவை இந்த பிரச்சனைகளை தடுக்க உதவும்.
Image Source: istock
சிறுநீரகப் பிரச்சனைகள் நமது உடலில் அமிலம் சமநிலைப் படுத்தப்படுவதை பாதிக்கிறது. இதனால் இந்த வளர்ச்சி மாற்ற அமிலமிகு பாதிப்பு ஏற்படுகிறது.
Image Source: istock
சமநிலையற்ற பாராதைராய்டு ஹார்மோன் அளவுகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.
Image Source: istock
Thanks For Reading!