Jun 26, 2024
சிலருக்கு 20 வயதை தாண்டும் போதே, முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் வர தொடங்கி, வயதான தோற்றம் எட்டிபார்க்க தொடங்கும். அதற்கு என்ன காரணங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
உடலில் நீர்ச்சத்து இல்லாதது சருமம் மந்தமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும். நீரிழப்பு, சரும சேதத்தில் இருந்து தன்னை தானே சரிசெய்யும் திறனை பாதிக்க செய்கிறது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை பாதித்து, சுருக்கங்களை உண்டாக்கக்கூடும்
Image Source: istock
நம்மில் பெரும்பாலானோர் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது கிடையாது. இது முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்பட முக்கிய காரணமாகும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்கள் சருமத்தை பாதித்து கருவளையம், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை உண்டாக்கும்
Image Source: pexels-com
சருமம் வயதாகுவதற்கு, வைட்டமின் சி குறைபாடும் காரணமாக இருக்கக்கூடும். ஏனெனில், வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சுருக்கங்களை போக்குவது மட்டுமின்றி இயற்கை பொலிவை தர செய்கிறது
Image Source: istock
புகைப்பிடிப்பது கொலாஜன் உற்பத்தியை குறைப்பதோடு சருமத்தின் நெகிழ்ச்சிதன்மையை பாதிக்கக்கூடும். சிகரெட்டில் உள்ள நச்சு கலவைகள், சரும செல்களின் வளர்ச்சியை பாதித்து வயதானதாக மாற்ற செய்கிறது
Image Source: istock
படிப்பதில் சிரமம், நல்ல வேலை இல்லை போன்ற மன அழுத்தம் கூட, முன்கூட்டியே வயதான தோற்றத்தை உண்டாக்கக்கூடும். மன அழுத்தம், ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளையை பாதித்து, சருமத்தில் கருவளையம், கருமை மற்றும் கோடுகளை உண்டாக்கிறது
Image Source: istock
நீங்கள் உட்கொள்ளும் சில உணவுகள், சரும ஆரோக்கியத்தை பாதிக்க செய்யலாம். குறிப்பாக, சர்க்கரை நிறைந்த உணவுகள், சருமத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து முகப்பருவை உண்டாக்கும். சில உணவுகள் நீரிழப்பை உண்டாக்கி சருமத்தை வயதானாதாக மாற்றக்கூடும்
Image Source: istock
எடை குறைவாக இருப்பதும் உங்க முக அமைப்பில் உள்ள இயற்கையான கொழுப்புகளை குறைக்க செய்கிறது. இது தோல் தொய்வு மற்றும் சுருக்கங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
Image Source: istock
தினமும் யோகா பயிற்சி செய்யுங்கள். கணினி, மொபைல் பார்க்கும் நேரத்தை குறையுங்கள். ஆரோக்கியமான உணவுகள் மட்டுமின்றி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள். சன்ஸ்கிரீன் அப்ளை செய்யாமல் வெயிலில் செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!