Jun 24, 2024
By: Nivethaசமையல் எரிவாயு என்னும் சிலிண்டர் திடீரென காலியானால் மாற்று சிலிண்டர் இல்லாத பட்சத்தில் நமது அன்றாட பணிகள் பாதிப்புறும். எனவே அது காலியாக போகிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எவ்வாறு என்பதை தான் இப்பதிவில் பார்க்கவுள்ளீர்கள்
Image Source: istock
சிலிண்டர் ஃபுல்லாக இருக்கும் பொழுது பர்னரில் தீயானது நீல நிறத்தில் எரியும். அதுவே காலியாக போகிறது என்றால் அடுப்பின் சுடர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
Image Source: pexels
அடுப்பை பற்ற வைத்தவுடன் சுடரில் இருந்து கருப்பு நிற புகை வந்தால் சிலிண்டர் காலியாகி விட்டது என்று அர்த்தம்.
Image Source: pexels
சிலிண்டர் காலியாக போகிறது என்றால் எரிவாயுவின் வாசனை சற்று அதிகமாக வரும்.
Image Source: pexels
ஈரமான துணி கொண்டு சிலிண்டரை துடைத்தால், காலியாக இருக்கும் இடங்கள் சீக்கிரம் காய்ந்து விடும், எரிவாயு உள்ள இடம் ஈரப்பதமாக காணப்படும்.
Image Source: istock
சிலர் சிலிண்டரை கையில் தூக்கி அதன் எடையினை கொண்டும் காலியாக போகிறதா என்பதை கண்டறிய முயற்சிக்கிறார்கள்.
Image Source: pixabay
வீண் கசிவுகளை தவிர்ப்பதன் மூலம் சிலிண்டர் சீக்கிரம் காலியாவதை தடுக்கலாம். அதற்கு எரிவாயு குழாய்கள், பர்னர்கள் மற்றும் ரெகுலேட்டர்களை பழுதடைய விடாமல் அவ்வப்போது சரிப்பார்த்து சுத்தம் செய்து வைக்கவும்.
Image Source: pexels
சமைக்கும் பொருட்களை மூடி வைத்து சமைத்தால் சமையலும் சீக்கிரம் முடியும், எரிவாயும் சேமிக்கப்படும்.
Image Source: pexels
முடிஞ்சளவு குக்கரில் சமைக்கக்கூடிய பொருட்களை சமைப்பதன் மூலமும், சிறுதானியங்கள், கருப்பு அரிசி-பருப்பு வகைகளை ஊறவைத்து சமைப்பதன் மூலமும் எரிவாயு சேமிக்கப்படும்.
Image Source: istock
Thanks For Reading!