[ad_1] சிவப்பு நிற எலுமிச்சை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா...வாங்க பார்க்கலாம்

சிவப்பு நிற எலுமிச்சை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா...வாங்க பார்க்கலாம்

Jul 19, 2024

By: Nivetha

​எலுமிச்சை

எலுமிச்சை என்றாலே மங்களகரமான மஞ்சள் நிறம் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தற்போது சந்தையில் புதிதாக சிவப்பு நிற எலுமிச்சை அதிகளவில் விற்பனைக்கு வருகிறதாம். அதன் விவரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: istock

சிவப்பு நிற எலுமிச்சை

சிவப்பு நிற எலுமிச்சைகளை கொடுக்கும் எலுமிச்சை மரம் மேற்குவங்காளத்தில் புர்பா பர்தாமன் மாவட்டத்தில் புர்பஸ்தாலி என்னும் இடத்தில் இருக்கிறதாம். அங்குள்ள நர்சரி ஒன்றில் இந்த அரிய வகை எலுமிச்சைகள் விற்பனை செய்யப்படுகிறது.

Image Source: pixabay

விவசாயிகளுக்கு பரிந்துரை

சாதாரண எலுமிச்சைகளை விட இந்த சிவப்பு நிற எலுமிச்சை மரங்கள் அதிகளவு விளைச்சலை கொடுப்பதால் விவசாயிகள் இதனை தாராளமாக பயிரிடலாம் என்று அந்த நர்சரியில் இருப்போர் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் இந்த சிவப்பு எலுமிச்சை பழங்களில் அதிகளவு ஜூஸ் கிடைக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Image Source: pixabay

அதிகளவு ஜூஸ்

இந்த வகை எலுமிச்சை பார்க்க சிறியதாக இருந்தாலும் இப்பழம் அதிக விளைச்சல் மட்டுமின்றி அதிகளவு ஜூஸும் கிடைக்கும்.

Image Source: istock

அறுவடை

இந்த செடியை நட்ட ஒரு வருடத்திலேயே பழங்களை அறுவடை செய்யலாம். 6 மாதத்திற்கு ஒருமுறை என 25 வருடம் இந்த மரம் விளைச்சலை கொடுக்கும்.

Image Source: pixabay

பழத்தின் எடை

இந்த மரத்தில் காய்க்கும் பழங்கள் பெரிதாக இருக்கும் பட்சத்தில் ஒரு பழத்தின் எடை 70 கிராம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒரு மரத்தில் மட்டுமே 1500 பழங்கள் வரை கிடைக்கும்.

Image Source: pixabay

செலவும் குறைவு

இந்த மரத்தை நடவு செய்ய குறைந்தளவு தான் செலவாகும். செடி வாடி விடுமோ அல்லது கூலி ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமோ என்னும் கவலையும் வேண்டாம். ஆனால் மரத்தை முடிந்தளவு மேடான பகுதியில் நடவு செய்வது நல்லது, அப்போது தான் தண்ணீர் தேங்காமல் இருக்கும்.

Image Source: pixabay

சுவை

இப்பழத்தின் சுவை வழக்கமான எலுமிச்சை பழத்தின் சுவை போலவே இருந்தாலும், நன்கு பழுத்த சிவப்பு எலுமிச்சையின் உட்பகுதி அதிக புளிப்பு சுவையினை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செடி இன்னும் சந்தைக்கு வரவில்லை, இவர்களது நர்சரியில் இந்த செடி ஒன்றின் விலை ரூ.150க்கு விற்பனை செய்கிறார்கள்.

Image Source: Samayam Tamil

அதிகளவு லாபம்

இந்த செடி சந்தைக்கு வரும் பட்சத்தில் விவசாயிகள் அதிகளவு லாபம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த காயின் தனித்துவமான நிறமும், அதிகளவு பழச்சாறும் வியாபாரிகள் மற்றும் மக்களை நிச்சயம் கவரும் என்று அந்த நர்சரி உரிமையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: pixabay

Thanks For Reading!

Next: போன் பேட்டரியை பாதுகாக்க இப்படி சார்ஜ் செய்து பாருங்கள்

[ad_2]