Jul 27, 2024
வருடம் முழுவதும் சீசன்கள் மாறிமாறி வரும், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் என்று மாற்றம் ஏற்படுவதால் சீதோஷ்ண நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சீசன்கள் மாற்றம் அடையும் பொழுது நமது உணவு முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
Image Source: istock
சீசன்களில் மாற்றம் ஏற்படுவது என்பது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் மாற்றம் நிகழும். எனவே, அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நமது உணவு முறைகளில் கொண்டுவர வேண்டிய ஒருசில குறிப்புகளை தான் இப்பதிவில் காணவுள்ளோம்.
Image Source: istock
கோடைக்காலத்திலிருந்து குளிர் காலத்திற்கு மாற்றம் ஏற்படும் நிலையில், நல்ல பசி மற்றும் ஜீரணம் சக்தி மேம்படும். இந்த காலக்கட்டத்தில் நாம் நல்ல கொழுப்புகள் நிறைந்த நெய், எள், பாதாம் பருப்புகள் போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடலாம். இதனால் ஜீரணம் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவை முழுசாக உடலுக்கு கிட்டும்.
Image Source: istock
வெயில் காலத்திலிருந்து குளிர் காலத்திற்கு சீசன் மாறும் நிலையில், தலைமுடியில் இருக்கும் ஈரப்பசை நீங்கி முடி உலர்ந்து காணப்படும். இதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் மற்றும் இலவங்கப்பட்டை, இஞ்சி போன்ற ஸ்பைஸஸ்களை சாப்பிடலாம், நல்ல தீர்வு கிடைக்கும்.
Image Source: istock
இந்த குளிர்காலத்தில் லெமன் க்ராஸ், இஞ்சி, பட்டை, இலவங்கம், லெமன் ஜூஸ், தேன் உள்ளிட்டவைகளை சேர்த்து அதனை மூலிகை டீயாக தயாரித்து அருந்தலாம். இது ஜீரணத்தை மேம்படுத்தும், உடல் ஆரோக்கியத்திற்கு உதவும், கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
Image Source: istock
உடலுக்கு உஷணத்தினை ஏற்படுத்தும் இஞ்சி, பட்டை, கிராம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலா பொருட்களை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்ல பலன் கிடைக்கும். இது பலவீனமான நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும், மலச்சிக்கலை தீர்க்கும்.
Image Source: istock
குளிர்காலத்தில் பால், தயிர், வெண்ணெய் போன்ற போன்ற பால் சார்ந்த பொருட்களை அளவுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் காலநிலை மாற்றம் காரணமாக இப்பொருட்கள் ஜீரணமாக வெகு நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
மேலும் பால் பொருட்களை சாப்பிட்டால் மூச்சு பாதையில் சளியை உற்பத்தி செய்யும். அதற்கு மாற்றாக பாதாம் பருப்புகளை வேக வைத்து அதனுடன் உங்களுக்கு பிடித்த ஊட்டம் நிறைந்த வேறு சில உணவு பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் சளி, நாள்பட்ட இருமல் குணமாகும்.
Image Source: istock
சீசன் மாறும் போது உள்ளூரில் விளையும் உணவு பொருட்களை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில், இது தான் நமது உணவுமுறையோடு ஒத்துப்போகும்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!