May 25, 2024
சர்க்கரை நோயாளிகளின் பிரதான உணவாக கோதுமை பார்க்கப்படும் நிலையில், இந்த கோதுமைக்கு மாற்றாக இவர்கள் வேறு என்னென்ன சாப்பிடலாம்? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதில் ஒரு சதவீதம் மட்டுமே சுக்ரோஸ் உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் குறைவாக உள்ளன. எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிக்க இது உதவுகிறது.
Image Source: istock
இது கோதுமையில் இருப்பது போன்று அல்லாமல் பசை பொருள் அற்ற வகையை சேர்ந்தது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிரம்பி இருப்பதால் கோதுமைக்கு மாற்றாக இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
Image Source: istock
பிரவுன் ரைஸில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கப்படுத்தி செரிமான செயல்பாடுகளை சரியாக்குகிறது. இதனால் கோதுமைக்கு பதிலாக பிரவுன் ரைஸை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: istock
பாதாமிலிருந்து அரைத்து எடுக்கப்படும் பாதாம் மாவு மிகவும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் உள்ளது. உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளுடன் இருப்பவர்களுக்கு கோதுமை மாவுக்கு பதிலாக பாதாம் மாவு சிறந்த மாற்றாக இருக்கும்.
Image Source: istock
தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்தும் தேங்காய்யிலிருந்து மாவு தயாரித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதில் கார்போஹைட்ரேட் உடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
Image Source: istock
இது உலர வைக்கப்பட்ட கார்பன்சோ பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் மாவு ஆகும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோதுமை மாவுக்கு பதிலாக கடலை மாவினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: istock
இது கோதுமையின் ஒரு வகை தான் என்றாலும் இதில் அதைவிட அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உடலில் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது.
Image Source: istock
இதுவும் கோதுமையை சார்ந்த ஒரு வகை தான் என்றாலும் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது. கோதுமைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தி வர நல்ல பலன் காணலாம்!
Image Source: istock
Thanks For Reading!