[ad_1] சுகரை கட்டுப்படுத்த உதவும் சதகுப்பி; எப்படி பயன்படுத்துவது?

May 15, 2024

சுகரை கட்டுப்படுத்த உதவும் சதகுப்பி; எப்படி பயன்படுத்துவது?

mukesh M

பலன் தரும் சதகுப்பி!

ஆயுர்வேத முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றான சதகுப்பி-யினை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

சர்க்கரை நோயாளிக்கு சதகுப்பி!

நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த சதகுப்பி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது!

Image Source: istock

எப்படி உதவுகிறது?

தகவல்கள் படி இந்த சதுகுப்பி இலைகளில் சுமார் 70 வகையான ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை, நீரிழிவு நோயை எதிர்த்து போராட உதவுவதோடு, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

Image Source: istock

உணவில் சேர்ப்பது எப்படி?

நம் வீடுகளில் சமைக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கடுகு சீரகம் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து தாளிப்பது போல இந்த சதகுப்பி இலைகளை சேர்த்து தாளித்து சாப்பிட்டு வரலாம்.

Image Source: istock

ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம்!

இந்த சதகுப்பி இலைகளை நன்கு கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர், அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து பின் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து கலந்து ஜூஸ் வடிவில் குடித்து வரலாம்!

Image Source: pexels-com

3

Image Source: istock

சதகுப்பி தோசை!

சதகுப்பி இலைகளை பொடிதாக நறுக்கி நாம் தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் இந்த மாவை பயன்படுத்தி தோசை தயார் செய்து தினசரி காலை உண்டு வர நல்ல பலன் காணலாம்.

Image Source: istock

சூப், சாலட்!

ஒரு சிலருக்கு இந்த சதகுப்பி கீரையை சமைத்து சாப்பிட கஷ்டமாக இருக்கலாம். இவர்கள் இந்த சதகுப்பியை சூப்புகள், சாலடுகள், ஊறுகாய் அல்லது வெஜிடபிள் கறிகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

Image Source: istock

சதகுப்பி பொடி!

இந்த சதகுப்பி இலைகளை பொடி அரைத்து சிறிது நல்லெண்ணெயுடன் கலந்து - போதுமான அளவு வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம்!

Image Source: istock

எச்சரிக்கை!

சதகுப்பி இலையின் நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவும் நிலையிலும், ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்க கூடும். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கு பின் இதை உட்கொள்வது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: சர்க்கரை நோயாளிகள் பச்சை பட்டாணி உட்கொள்வது நல்லதா?

[ad_2]