Aug 19, 2024
BY: Anoj, Samayam Tamilபாகற்காயில் இயற்கையாகவே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. இந்தப் பதிவில், பாகற்காய் கொண்டு எப்படி சுவையான கூட்டு செய்யலாம் என்பதை இஹ்கு பார்க்கலாம்
Image Source: istock
வெங்காயம் - 1; பாகற்காய் - 1; பருப்பு - அரை கப்; உப்பு - சுவைக்கேற்ப; மல்லித் தூள் - அரை டீஸ்பூன்; மஞ்சள் - அரை டீஸ்பூன்; மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
Image Source: istock
கடுகு - 1 டீஸ்பூன்; உளுந்து - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு; துருவிய தேங்காய் - அரை கப்; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பாகற்காய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
Image Source: pexels-com
இதற்கிடையில், பருப்பை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, பாகற்காய் கலவையில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
Image Source: istock
பருப்பு நன்றாக வெந்ததும், அடுப்பை மிதமான நெருப்பில் வைக்க வேண்டும். பருப்பு வெந்ததும் கரண்டி பயன்படுத்தி நன்றாக மசித்துக்கொள்ளவும்
Image Source: istock
பிறகு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கலவை கெட்டியான தன்மை வருவதற்காக சுமார் 15 நிமிடங்கள் கடாயை மூடி வைக்கவும்
Image Source: istock
இதற்கிடையில், அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்
Image Source: istock
கலவை வதங்கியதும் அதனை பாகற்காய் கூட்டுடன் சேர்த்து கிளறினால், ருசியான பாகற்காய் கூட்டு ரெடி.
Image Source: istock
Thanks For Reading!