May 17, 2024
சுனில் சேத்ரி ஆசியா, ஐரோப்பா (போர்ச்சுகல் ஸ்போர்டிங் கிளப்), வட அமெரிக்கா (கன்சாஸ் சிட்டி விஜாட்ஸ்) அணிக்காக விளையாடியுள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டிகளில் இவர் 19 கோல்களுடன் இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
இந்தியாவில் நடக்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில், அதிக ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
ISL போட்டிகளில் வடகிழக்கு கால்பந்து கூட்டமைப்பு அணிக்காக விளையாடும் இவர் 2015ல் முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
Image Source: instagram-com/chetri_sunil11
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
இந்திய வீரர் சர்வதேச போட்டியில் 4 முறை ஹாட்ரிக் அடித்துள்ளார். இவர் 2008ல் தஜகிஸ்தான், 2010 வியட்நாம், 2018ல் சைனிஸ் தைபே, 2023ல் பாகிஸ்தானுக்குக்கு எதிராக ஹாட்ரிக் அடித்துள்ளார்
Image Source: instagram-com/chetri_sunil11
தேசிய கால்பந்து லீக்/ ஐ லீக் எனும் தேசிய அளவிலான போட்டியில் இவர் 90 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
2005 முதல் இந்தியாவுக்காக கால்பந்து விளையாடத் தொடங்கிய இவர், இந்திய அணிக்காக 94 கோல்கள் அடித்து இதுவரை யாரும் படைத்திராத சாதனையைப் படைத்துள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
கிறிஸ்டியானோ ரொனால்டோ (128), அலி டயே (108), மெஸ்ஸியை (106) தொடர்ந்து, சுனில் சேத்ரி 94 கோல்களுடன், ஒரு நாட்டிற்காக அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரர்களில் 4ம் இடம் பிடித்துள்ளார்.
Image Source: instagram-com/chetri_sunil11
Thanks For Reading!