[ad_1] சுற்றுலா செல்லுமிடத்தில் ஏமாறாமல் தப்பிப்பது எப்படி?

Jun 3, 2024

சுற்றுலா செல்லுமிடத்தில் ஏமாறாமல் தப்பிப்பது எப்படி?

Anoj

அதிக பயண கட்டணம்

மிகவும் பொதுவான மோசடி சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பயண கட்டணம் வசூலிப்பது. எனவே டாக்ஸி, ஆட்டோ என்று எதில் பயணிப்பதற்கு முன்பும் தெளிவாக விசாரித்துச் சரியான கட்டணத்தை உறுதிப்படுத்திய பிறகு பயணியுங்கள்.

Image Source: pexels-com

ஹோட்டல் முன்பதிவு

சுற்றுலா பயணிகளிடம் குறைந்த விலை அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டது என்று ஏமாற்றி அதிக விலை அறையை ஏற்குமாறு நிர்ப்பந்திப்பார்கள். எனவே, பயணத்திற்கு முன்பே தங்கும் அறையை முன்பதிவு செய்வது சிறப்பு

Image Source: istock

திருடர்கள்

கூட்ட நெரிசலான சுற்றுத்தலங்களில் குழுக்களாகச் செயல்பட்டு உங்களை திசைதிருப்பி பொருட்களைத் திருட முயல்வார்கள். பணம் மற்றும் விலை உயர்ந்த முக்கிய பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Image Source: istock

அதிக நட்புடன் பழகுபவர்கள்

பல உள்ளூர் வாசிகள் உண்மையான நட்புடன் உதவினாலும், அதிக ஆர்வத்துடன் வற்புறுத்தி உதவ முயல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாகக் குறிப்பிட்ட கடை அல்லது சேவைகளுக்கு அழைத்துச் சென்றால் கூடுதல் கவனத்துடன் இருங்கள்

Image Source: pexels-com

ஏ.டி.எம் இயந்திரங்கள்

சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்களில் ஸ்கிம்மிங் சாதனங்கள் மற்றும் கேமராக்கள் உள்ளதா என்று கவனியுங்கள். வங்கிகள் மற்றும் நம்பகமான இடங்களில் இருக்கும் ஏ.டி.எம்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

Image Source: pexels-com

போலி அதிகாரிகள்

போலி பேட்ஜ், அடையாள அட்டை காண்பித்து உங்களைப் பரிசோதிக்கும் இவர்கள், கள்ளநோட்டு இருப்பதாகவோ அல்லது விதிமீறலில் ஈடுபட்டதாகவோ கூறி பணம் பறிக்க முயல்வர். அப்போது தைரியமாகக் காவல் நிலையம் அழைத்துச்செல்ல சொல்லுங்கள்.

Image Source: unsplash-com

முன்னெச்சரிக்கை

ஒரு இடத்திற்குச் செல்வதற்கு முன் அங்கு பொதுவாக நடக்கும் மோசடிகள் பற்றி இணையத்திலோ, நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இது மோசடிகளை விழிப்புடன் எதிர்கொள்ள உதவும்.

Image Source: unsplash-com

கூடுதல் கட்டணம்

உணவகங்கள், சேவை வழங்கும் இடங்களில் கவனமாக விலைப் பட்டியலைப் படியுங்கள், ஏதேனும் மறைக்கப்பட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று பாருங்கள். ஏதேனும் சந்தேகமிருந்தால் முன்பே விளக்கம் கேளுங்கள்.

Image Source: pexels-com

புகைப்பட மோசடி

பிரபலமான இடங்களில் இலவசமாக அல்லது குறைந்த விலைக்குப் புகைப்படம் எடுத்துத் தருவதாகக் கூறி, பின்னர் அதிக விலைக்கு விற்க முயல்வர். உங்களது புகைப்படங்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது முன்பே தெளிவாக விலைபேசுங்கள்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: விவேகானந்தர் நினைவு மண்டபம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]