May 21, 2024
மிகவும் எளிய முறையில் தயார் ஆகும் சட்னி ஒன்றினை தக்காளி, வேர்க்கடலை, வெங்காயம் மற்றும் சில பொருட்கள் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கடலை பருப்பு - 1 ஸ்பூன் | வேர்க்கடலை - 2 ஸ்பூன் | வெங்காயம் - 1 | பூண்டு பல் - 6 | பச்சை மிளகாய் - 4 | புளி - நெல்லிக்காய் அளவு | தக்காளி - 2
Image Source: istock
மஞ்சள் - 1 சிட்டிகை | பெருங்காயம் - 1 சிட்டிகை | கொத்தமல்லி - 1 கொத்து | எண்ணெய் - 4 ஸ்பூன் | கடுகு - 1 ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடலை பருப்பு, வேர்க்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வேங்காயம் சேர்த்து வதக்கவும்.
Image Source: istock
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் தக்காளி, புளி, மஞ்சள், பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
Image Source: istock
பின் இந்த சேர்மத்தை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
Image Source: istock
இதனிடையே தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கறிவேப்பிலை, கடுகு, உளுந்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
Image Source: istock
பின் இந்த தாளிப்பினை தயாராக உள்ள சட்னியில் சேர்த்து கரைத்துவிட சுவையான தக்காளி வெங்காய சட்னி ரெடி. சுட சுட சுட்டு எடுத்து இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறலாம்!
Image Source: istock
Thanks For Reading!