May 13, 2024
BY: Anojதினமும் ஒரே மாதிரியான முட்டை கறி சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ மசாலா பொருட்கள் மற்றும் முந்திரி கொண்டு தயாரிக்கப்பட்ட ஆப்கானி முட்டை கிரேவி செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
வேகவைத்த முட்டை - 4; வர மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்; மஞ்சள் - 1 டீஸ்பூன்; எண்ணெய் - தேவையான அளவு; இலவங்கப்பட்டை - 1; ஏலக்காய் - 2; கிராம்பு - 3; சீரக தூள் - 1 டீஸ்பூன்; கரம் மசாலா - 1 டீஸ்பூன்; மஞ்சள் - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
Image Source: pexels-com
வெங்காயம் - 1; எண்ணெய் - 2 டீஸ்பூன்; இஞ்சி - 1 இன்ச்; பூண்டு - 6 பற்கள்; முந்திரி - 8; ப.மிளகாய் - 6 ; உ்பு - தேவைக்கேற்ப; கொத்தமல்லி - அரை கப்; தயிர் - அரை கப்; மிளகு தூள் - அரை டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்; கிரீம் - 4 டீஸ்பூன்
Image Source: istock
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும். கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொத்தமல்லி சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் உருவாக்கவும்
Image Source: istock
அடுத்து, லேசாக எண்ணெய் விட்டு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு இரண்டாக கட் செய்த வேகவைத்த முட்டைகளை சேர்த்து சுமார் 1 நிமிடம் நன்றாக வதக்கி தனியாக வைத்துவிட வேண்டும்
Image Source: istock
இப்போது அதே கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிக்ஸியில் அரைத்த பேஸ்டை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் கிளற வேண்டும்
Image Source: pexels-com
பிறகு தயிர், மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். கடாயை மூடி சுமார் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்
Image Source: istock
அடுத்து, கசூரி மெத்தி மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்திருக்க வேண்டும்
Image Source: istock
இறுதியாக, ஏற்கனவே வதக்கிய முட்டைகள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்தால், சுவையான ஆப்கானி முட்டை கிரேவி ரெடி. இதை ரொட்டி அல்லது பரோட்டாவுக்கு தொட்டு சாப்பிடலாம்
Image Source: istock
Thanks For Reading!