Jul 30, 2024
எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து காணப்படும் கம்பு பயன்படுத்தி சுவையான பணியாரம் ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
கம்பு மாவு - 2 கப் | ரவை - 1 கப் | தயிர் - 2 ஸ்பூன் | சீரகம் - ½ ஸ்பூன் | வெங்காயம் - 2 | கேரட் - 1 | பேங்கிங் சோடா - ½ ஸ்பூன்
Image Source: istock
பச்சை மிளகாய் - 2 | கறிவேப்பிலை - 1 கொத்து | கொத்தமல்லி - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதேநேரம் கேரட்டை நன்கு துருவி தனியே எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கம்பு மாவுடன் ரவை, தயிர், பேக்கிங் சோடா, உப்பு, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இந்த தாளிப்பினை தயாராக கரைத்து வைத்துள்ள பணியார மாவில் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்!
Image Source: istock
தற்போது பணியாரம் சுட்டு எடுக்க - பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சட்டி சூடேறியதும் எண்ணெய் சேர்த்து சட்டியை தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் தயாராக உள்ள பணியார மாவினை சட்டியில் சேர்த்து பதமாக சுட்டு எடுக்க சுவையான கம்பு பணியாரம் ரெடி. சுட சுட ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பாருடன் சேர்த்து பரிமாறுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!