May 28, 2024
BY: Anojவார இறுதியில் அசைவ உணவை சாப்பிட விரும்பினால், ஒரே மாதிரியான சிக்கனை செய்து போர் அடிக்காமல், கறிவேப்பிலை சிக்கன் வறுவலை முயற்சித்து பாருங்கள். அதன் எளிய செய்முறையை இங்கு காணலாம்
Image Source: istock
சின்ன வெங்காயம் - 20; கொத்தமல்லி - சிறிதளவு; கறிவேப்பிலை - சிறிதளவு; எண்ணெய் - தேவையான அளவு; இலவங்கப்பட்டை - 1; ஏலக்காய் - 4; கிராம்பு - 5; சீரகம் - 1 டீஸ்பூன்
Image Source: istock
சிக்கன் - 1 கிலோ; நறுக்கிய பெரிய வெங்காயம் - 3; கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்; மஞ்சள் - 2 டீஸ்பூன்; மிளகு தூள் - 1 டீஸ்பூன்; சோம்பு - 1 டீஸ்பூன்; வர மிளகாய் - 4
Image Source: istock
முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்
Image Source: pexels-com
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, நறுக்கிய வர மிளகாய் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
Image Source: istock
அடுத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின், கொத்தமல்லி மற்றும் மஞ்சளை சேர்த்து மசாலா மிக்ஸ் ஆகும் வரை கிளற வேண்டும்
Image Source: istock
இப்போது அரைத்த வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்டை சேர்த்துவிட்டு, சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
Image Source: istock
பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கடாயை மூடி சிக்கன் நன்றாக வேகும் வரை வைத்திருக்க வேண்டும்
Image Source: istock
தண்ணீர் வற்றி கலவை சரியான பதத்திற்கு வந்ததும் மிளகு தூளை தூவி நன்றாக கிளறிவிட வேண்டும். அவ்வளவு தான், சுவையான கறிவேப்பிலை சிக்கன் வறுவல் ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கக்கூடும்
Image Source: unsplash-com
Thanks For Reading!