Jun 25, 2024
BY: Nivethaஒரு கட்டு கீரை, 1 டீஸ்பூன் சீரகத்தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், சி.வெங்காயம்-7, பூண்டு 4 பல், தேங்காய் பால் 1 கப், உப்பு தேவையான அளவு.
Image Source: istock
முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு கழுவி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
Image Source: pexels
அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சுத்தம் செய்த கீரை, எடுத்து வைத்துள்ள சீரகத்தூள், சி.வெங்காயம், பூண்டு, உப்பு ஆகியவற்றை போட்டு மூடி வைக்கவும்.
Image Source: istock
குக்கரில் 3 விசில் வரும்வரை அடுப்பில் வைத்திருந்து வந்த பின்னர் குக்கரை அடுப்பில் இருந்து இரக்கவும்.
Image Source: istock
குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கீரை கலவையினை சற்று சூடு ஆறிய பிறகு, நன்கு மசித்து கொள்ளுங்கள்.
Image Source: pexels
அடுத்து ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், மசித்து வைத்துள்ள கீரை கலவை, 1 கப் தேங்காய் பால் ஆகியவற்றை ஊற்றவும்
Image Source: pexels
இந்த கலவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்கு கொதி வந்த பிறகு அடுப்பினை அணைத்து ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து இறக்கவும்.
Image Source: istock
அவ்வளவு தான், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கீரை சேர்த்த தேங்காய் பால் சூப் ரெடி.
Image Source: istock
தேங்காய் பால் சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறும், வயிற்று புண் மற்றும் வாய் புண்கள் ஆறும், மூளை வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவுகிறது. எனவே இந்த சூப்பை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் குடிக்கலாம்.
Image Source: istock
Thanks For Reading!