[ad_1] சுவையான கோவைக்காய் சட்னி செய்வது எப்படி தெரியுமா?

Aug 5, 2024

சுவையான கோவைக்காய் சட்னி செய்வது எப்படி தெரியுமா?

mukesh M

கோவைக்காய் சட்னி!

எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த கோவைக்காய் பயன்படுத்தி சுவையான சட்னி ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

கோவைக்காய் - 200கி | தக்காளி - 2| பெருங்காயம் - 1 சிட்டிகை | கொத்தமல்லி - 1 கைப்பிடி | காய்ந்த மிளகாய் - 10 | மிளகு - 1 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | பூண்டு பல் - 6

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பச்சை மிளகாய் - 4 | கறிவேப்பிலை - 1 கொத்து | வேர்க்கடலை - 1 கைப்பிடி | கடுகு - ¼ ஸ்பூன் | உளுந்து - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி, கோவைக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தற்போது சட்னி தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கோவைக்காய், தக்காளி சேர்த்து பதமாக வதக்கவும்!

Image Source: istock

செய்முறை படி - 3

தொடர்ந்து இதனுடன் உப்பு, பெருங்காயப் பொடி, நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசம் நீங்க நன்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்!

Image Source: istock

செய்முறை படி - 4

இதனிடையே கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு பல், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து, அகன்ற தட்டு ஒன்றுக்கு மாற்றி நன்கு ஆற விடவும்!

Image Source: istock

செய்முறை படி - 5

பின் இந்த சேர்மத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். தொடர்ந்து இதே ஜாரில் கோவைக்காய் - தக்காளி சேர்மத்தை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்!

Image Source: istock

கோவைக்காய் சட்னி ரெடி!

தற்போது தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் இதனுடன் அரைத்து வைத்த சேர்மங்களை சேர்த்து கலந்து விட சுவையான கோவைக்காய் சட்னி ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: சுவையான பாதாம் லட்டு மற்றும் சின்ன வெங்காய பணியாரம்

[ad_2]