Jun 13, 2024
BY: Nivethaதேவையான அளவு எண்ணெய், 2 முட்டை, 100கி முட்டை கோஸ், பொடியாக நறுக்கிய கேரட் 1, 1 பெ.வெங்காயம், 150கி அரைத்த போன்லெஸ் சிக்கன், ப.மிளகாய் 1, பூண்டு 8, உப்பு, மிளகுத்தூள், 2 தக்காளி, கா.மிளகாய் 4
Image Source: pexels-com
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, 1/4டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வேகும் வரை கிண்டி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்
Image Source: pexels-com
அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய ப.மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் அதில் முட்டைகோஸ், பொடியாக நறுக்கிய பெ.வெங்காயம் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு வதக்க வேண்டும்
Image Source: pexels-com
அந்த கலவையில் அரைத்த போன்லெஸ் சிக்கனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு கறியில் உள்ள நீர் வற்றி நன்கு வேகும் வரை வேக விடவும்
Image Source: pexels-com
இறுதியாக அதில் 2 டீஸ்பூன் பெப்பர் பொடி சேர்த்து நன்கு கிளறி முன்னதாக பொரித்து எடுத்து வைத்த முட்டையையும் அதில் போட்டு நன்றாக ஒருசேர கிளறி விடவேண்டும்
Image Source: pexels-com
2 தக்காளி, விதைகள் எடுத்த கா.மிளகாய் 4, 4 பல் பூண்டு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, பின்னர் தக்காளி தோலினை உரித்து எடுத்து அதனை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
Image Source: pexels-com
சப்பாத்தியை பாதியளவு கட் செய்து அதில் கேஷோநைஸ் சாஸ், நாம் செய்து வைத்த டகோஸ் சட்னி, சிக்கன் ஸ்டப்பிங் ஆகியவற்றை வைத்து நன்றாக வ்ரேப் செய்து கொள்ளவும்
Image Source: pexels-com
அடுப்பில் தவா வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் வ்ரேப் செய்த சப்பாத்திகளை போட்டு நன்றாக இரு பக்கமும் திருப்பி விடவும். இப்படி செய்வதால் உள்ளிருக்கும் ஸ்டப்பிங் நன்றாக பிக்ஸ் ஆகும்
Image Source: pexels-com
அவ்வளவு தான் சுவையான சிக்கன் டாகோஸ் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: Navbharat Times
Thanks For Reading!