[ad_1] சுவையான 'சின்ன வெங்காயம் தொக்கு' செய்வது எப்படி?

Jul 22, 2024

BY: Anoj, Samayam Tamil

சுவையான 'சின்ன வெங்காயம் தொக்கு' செய்வது எப்படி?

சின்ன வெங்காயம் தொக்கு

சமையலின் சுவையை கூட்டும் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி எப்படி அட்டகாசமான தொக்கு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/youreverydaycook

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - கால் கிலோ; நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்; வெந்தயம் - அரை டீஸ்பூன்; வர மிளகாய் - 10; வெல்லம் - அரை டீஸ்பூன்; காஷ்மீரி வத்தல் பொடி - 1 டீஸ்பூன்; புளி தண்ணீர் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை - சிறிதளவு; பெருங்காயம் - 1 டீஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் 6 வர மிளகாய், வெந்தயம் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்

Image Source: pexels-com

செய்முறை படி - 2

அடுத்து, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவும். சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 3

கலவை நன்கு வதங்கியதும், அதனை மிக்ஸி ஜாருக்கு மாற்ற வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துகொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 4

இப்போது அதே கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வர மிளகாய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

அடுத்து, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கிளறவேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு கிளற செய்யலாம்

Image Source: istock

செய்முறை படி - 6

பின் தேவையான அளவு உப்பு மற்றும் புளி தண்ணீரை சேர்க்க வேண்டும். இறுதியாக, வெல்லம் மற்றும் வத்தல் பொடியும் சேர்த்து கொள்ளலாம்

Image Source: istock

வெங்காயம் தொக்கு ரெடி

சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான சின்ன வெங்காய தொக்கு ரெடி. இதை தோசை, இட்லிக்கு சாப்பிடலாம் அல்லது சாதத்துடனும் சேர்த்து சாப்பிட செய்யலாம்

Image Source: instagram-com/abt_experiments

Thanks For Reading!

Next: உடல் எடையை குறைக்க உதவும் ‘தக்காளி - துளசி சூப்’!

[ad_2]