[ad_1] சுவையான ‘ஜவ்வரிசி வெஜ் சூப்’ - செய்முறை!

Aug 10, 2024

BY: mukesh M, Samayam Tamil

சுவையான ‘ஜவ்வரிசி வெஜ் சூப்’ - செய்முறை!

ஜவ்வரிசி வெஜ் சூப்!

பச்சை காய்கறிகளுடன் ஊட்டச்சத்து மிக்க ஜவ்வரிசி பயன்படுத்தி சுவையான சூப் ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

ஜவ்வரிசி - 1 கப் | பச்சை மிளகாய் - 2 | இஞ்சி - 2" அளவு | நெய் - 1 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | கேரட் - 2 | பீன்ஸ் - 2 கப் | ஸ்வீட் கார்ன் - 1 கப்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

மிளகு பொடி - ½ | தயிர் - 1 கப் | கொத்தமல்லி - 1 கொத்து | முட்டைக்கோஸ் - 50கி | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட ஜவ்வரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து குக்கர் ஒன்றில் சேர்க்கவும். பின் இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வர வேக வைத்து இறக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் துருவி எடுத்துக்கொள்ளவும். அதேநேரம் கொத்தமல்லி, முட்டைகோஸை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தற்போது சூப் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் சீரகம், பச்சை மிளகாய், கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் சேர்த்து தாளிக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து இதனுடன் குக்கரில் அவித்த ஜவ்வரிசி, ஸ்வீட் காரன், உப்பு மற்றும் தயிர் சேர்த்து 7 -8 நிமிடங்களுக்கு வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

பின் இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதன் போது இதனுடன் கொத்தமல்லி தழைகளை சேர்த்துக்கொள்ளவும்.

Image Source: istock

ஜவ்வரிசி பாயாசம் ரெடி!

இறுதியாக இதனுடன் மிளகு பொடி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான ஜவ்வரிசி வெஜ் சூப் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: வேர்க்கடலை பயன்படுத்தி ஒரு ‘காஜு கட்லி’ செய்வது எப்படி?

[ad_2]