[ad_1] ​சுவையான தயிர் ஐஸ்க்ரீம் எப்படி செய்வது பார்ப்போம் வாருங்கள்

Jun 17, 2024

BY: Nivetha

​சுவையான தயிர் ஐஸ்க்ரீம் எப்படி செய்வது பார்ப்போம் வாருங்கள்

​மிஸ்தி டோய்

பெங்கால் ஸ்பெஷல் என்று கூறப்படும் இந்த மிஸ்தி டோய் ரெசிபியை தயிர் ஐஸ்க்ரீம் என்றும் கூறுகிறார்கள். அதன் செய்முறையினை இப்பதிவில் பார்ப்போம்

Image Source: pexels

​தயிர்

கடையில் வாங்கிய தயிரினை வடிகட்டியில் போட்டு அதற்கு அடியில் ஒரு பாத்திரத்தினை வைக்கவும். சுமார் ஒரு மணிநேரம் இப்படியே விடுவதன் மூலம் தயிரில் உள்ள தண்ணீர் வடிந்து கெட்டியான தயிர் நமக்கு கிடைக்கும்.

Image Source: pexels

​சர்க்கரை

இந்த ரெசிபிக்கு கேரமல் செய்ய ஒரு சிறிய கப் தயிருக்கு 100 கிராம் சர்க்கரையினை எடுத்து கொள்ளவும்.

Image Source: pixabay

​கேரமல் செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அது சூடானவுடன் நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையினை அதில் போட்டு நன்கு கிளறவும். தேவைப்பட்டால் அதில் ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு கைவிடாமல் கிளறி விடவும்.

Image Source: pexels

​கேரமல் பதம்

மிதமான சூட்டில் வைத்து செய்யும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் நிறம் மாறும். அது தான் கேரமலின் பதம். அதிக நேரம் விட்டால் கேரமல் கசக்க துவங்கி விடும்.

Image Source: Samayam Tamil

​ காய்ச்சிய பால்

250மி திக்கான பாலினை நன்கு காய்ச்சி எடுத்து கொள்ளுங்கள். அதனை அடுப்பில் இருக்கும் கேரமலில் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிண்டி விடுங்கள். ஊற்றியவுடன் சர்க்கரை கெட்டியாகும், பின்னர் அதுவே பாலுடன் நன்கு கரைய துவங்கும்.

Image Source: pixabay

​சர்க்கரை சேர்க்கவும்

அடுப்பினை மிதமான சூட்டில் வைத்தப்படி மீண்டும் அந்த கலவையில் 100கி சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும். பால் கெட்டியான பிறகு அடுப்பினை அணைக்கவும்.

Image Source: pexels

​தயிரை கலக்கவும்

நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள கெட்டி தயிரினை ஒரு பாத்திரத்தில் போட்டு விஸ்க் அல்லது கரண்டி வைத்து க்ரீம் பதம் வரும் வரை நன்கு கலந்து விடவும். பிறகு அதில் மிதமான சூட்டிலுள்ள பால் கேரமல் கலவையினை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

Image Source: pexels

​ப்ரிட்ஜில் வைக்கவும்

இந்த கலவையை ஒருமணி நேரம் வெளியிலேயே செட்டாக விட்டு, பிறகு அந்த பாத்திரத்தினை தட்டு அல்லது கவர் கொண்டு மூடி ப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் எடுத்தால் சுவையான தயிர் ஐஸ்க்ரீம் ரெடி.

Image Source: pexels

Thanks For Reading!

Next: வெற்றிலை பூண்டு சாதம் செய்வது எப்படி ?

[ad_2]