[ad_1] சுவையான 'பனானா பால்ஸ்' செய்வது எப்படி ?

Jun 4, 2024

BY: mukesh M

சுவையான 'பனானா பால்ஸ்' செய்வது எப்படி ?

வாழைப்பழங்கள்

பல்வேறு சுவை மற்றும் வகைகள் நிறைந்த வாழைப்பழங்களை வைத்து பல உணவு வகைகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் சுவையான 'பனானா பால்ஸ்' செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Image Source: pexels-com

தேவையான பொருட்கள்

வாழைப்பழம், தேங்காய், ப்ரெட் க்ரம்ப்ஸ், மஞ்சள் தூள், சர்க்கரை, நெய், எண்ணெய்.

Image Source: pexels-com

செய்முறை விளக்கம்

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் சேர்த்து சூடான பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழங்களை அதில் சேர்க்கவும். ஒரு பின்ச் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஒருசேர கிளறி விடவும்.

Image Source: pexels-com

சர்க்கரை

நன்கு குழைந்து வந்த பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறி விடவும். பின்னர் அதில் துருவிய தேங்காய் ஒரு கப் சேர்த்து கொள்ளவும்.

Image Source: pixabay

ப்ரெட் க்ரம்ப்ஸ்

அடுத்து அந்த கலவையில் எடுத்து வைத்துள்ள ஒரு கப் ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து ஒருசேர கிண்டி இறக்கி நன்கு ஆற விடவும்.

Image Source: istock

உருண்டை பிடித்தல்

அடுப்பில் வைத்து கிளறி எடுத்த கலவையினை நன்கு ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

பொன்னிறமாக மாறுதல்

அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் நாம் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும்.

Image Source: pixabay

ரெசிபி ரெடி

அந்த உருண்டைகள் பொன்னிறமாக மாறிய பின்னர் அதனை எடுத்து மேற்பரப்பில் தேங்காய் துருவல்களை தூவினால் ரெசிபி ரெடி.

Image Source: pexels-com

குழந்தைகளுக்கான ஸ்நேக்ஸ்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஸ்நேக்ஸ்களை கொடுக்க விரும்பினால் இந்த 'பனானா பால்ஸ்'-ஐ செய்து கொடுக்கலாம். நிச்சயம் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் செய்முறை

[ad_2]