[ad_1] சுவையான பலாப்பழ போளி - செய்முறை விளக்கம்!

Jun 1, 2024

BY: mukesh M

சுவையான பலாப்பழ போளி - செய்முறை விளக்கம்!

பலாப்பழ சீசன்

தற்போது பலாப்பழ சீசன் என்பதால் குறைந்த விலையில் பழங்கள் கிடைக்கும். அதனை பழமாக சாப்பிடுவதை விட, எளிதான முறையில் பலாப்பழ போளியாக செய்து சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.

Image Source: pixabay

தேவையான பொருட்கள்

பலாப்பழம் - 1/4கி, தேங்காய் ஒரு மூடி, நெய், நாட்டுச்சர்க்கரை, மைதா மாவு, சர்க்கரை, உப்பு.

Image Source: pexels-com

செய்முறை விளக்கம்

நறுக்கிய பலாபழத்தினை மிக்சியில் போட்டு மென்மையாக அரைத்து, அடுப்பில் வாணலி வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அது சூடான பின்னர் தேங்காய் துருவலை போட்டு மணம் வரும்வரை நன்றாக வறுக்க வேண்டும்.

Image Source: pexels-com

நாட்டுச்சர்க்கரை

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பலாப்பழத்தினை போட்டு நன்றாக கிளறவும். அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து ஒருசேர கிளறி எடுத்துக்கொள்ளவும்.

Image Source: pexels-com

தோசை மாவு பதம்

அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு பின்ச் உப்பு, 1 டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து கொள்ளவும்.

Image Source: pexels-com

தோசை போல் வார்க்கவும்

அடுப்பில் நான்ஸ்டிக் தவா வைத்து சூடான பின்னர் அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவினை தோசை போலவே ஊற்றி , அதனை சுற்றி எண்ணெய் விட்டு குறைவான தீயில் வைத்து முன்னும் பின்னுமாக திருப்பி போட்டு வேக வைக்கவும்.

Image Source: pixabay

பலாப்பழ கலவை

நான்ஸ்டிக் தவாவில் ஊற்றிய தோசை மேல் நாம் அரைத்து வைத்திருந்த பலாப்பழ கலவையினை வைக்கவும்.

Image Source: pexels-com

போளி ரெடி

பலாப்பழ கலவையினை போட்டு பரப்பிவிட்ட பிறகு, ஒருபக்கமாக மடித்து விட்டு அழுத்தி விட்டு எடுத்தால் சுவையான பலாப்பழ போளி ரெடி.

Image Source: pixabay

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

இந்த பலாப்பழ போளியினை ஈவ்னிங் ஸ்நேக்ஸாக கொடுத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: டேஸ்டியான 'ஜப்பான் சிக்கன்' சாப்பிட்டிருக்கீங்களா? ஈஸி செய்முறை

[ad_2]