Aug 3, 2024
BY: Nivethaபாதாம் என்றாலே அதில் பல்வேறு நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனை குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்னும் நிலையில், சற்று இதன் சுவையை கூட்டி பாதாம் லட்டாக செய்து சாப்பிடலாம்.
Image Source: istock
குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸாக ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை வாங்கி கொடுப்பதற்கு பதில் இந்த லட்டுவை செய்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த லட்டு செய்ய தேவையான பொருட்கள்- பாதாம் ஒரு கப், பால் ஒரு கப் மற்றும் சர்க்கரை ஒரு கப் எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: istock
பாதாமை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதன் தோல்களை நீக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை கப் பால் ஊற்றி சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் கரைய விடவும்.
Image Source: istock
சர்க்கரை நீரில் கரைந்து நன்கு பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இப்படி கிண்டும் பொழுது நமது கையில் அந்த விழுது தெறிக்காமல் இருக்க ஒரு துணியை சுற்றிக்கொண்டால் நல்லது.
Image Source: istock
பாதாம் விழுது நன்றாக பழுப்பு நிறத்திற்கு மாறி கெட்டியான நிலைக்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற விடுங்கள். பின்னர் கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளை பிடிக்க துவங்கலாம், விருப்பப்பட்டால் இதில் குங்குமப்பூ சேர்க்கலாம் இன்னும் சுவை கூடும்.
Image Source: istock
சுவை மற்றும் சத்தான சின்ன வெங்காய பணியாரம் செய்ய 1 கப் பச்சரிசி, 1 கப் இட்லி அரிசி, 3/4கப் உளுந்து, 3 ஸ்பூன் எண்ணெய், சி.வெங்காயம் 25, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் சீரகம், நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: istock
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவி சுமார் நான்கு மணிநேரத்திற்கு முன்னர் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணிநேரம் புளிக்க விடுங்கள்.
Image Source: pexels
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொரிய விட்டு, பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள சின் வெங்காயம் மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
Image Source: pexels
நன்கு வதங்கிய பின்னர் அந்த கலவையை எடுத்து மாவில் போட்டு, கொத்தமல்லி தழைகளையும் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேருமாறு நன்றாக கிண்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள். வழக்கம்போல் பணியார பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த மாவை ஊற்றி வேக விட்டு எடுத்தால் சுவையான பணியாரம் தயார்.
Image Source: istock
Thanks For Reading!