May 1, 2024
BY: Anojமாம்பழத்தின் அட்டகாசமான சுவை காரணமாக, அதன் உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்தப் பதிவில், மாம்பழம் பாயாசம் எப்படி செய்வது என்பதை விரிவாக காணலாம்
Image Source: freepik-com
மாம்பழக் கூழ் - 1 கப்; சர்க்கரை - அரை கப்; பால் - 1 லிட்டர்; கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை; நெய் - ஒரு டீஸ்பூன்; குருணை அரிசி - 2 டீஸ்பூன்
Image Source: istock
முந்திரி - 1 டீஸ்பூன்; உலர் திராட்சை - 1 டீஸ்பூன்; கண்டென்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்; மேங்கோ எசன்ஸ் - சில சொட்டுகள்; ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
Image Source: istock
முதலில் கடாயில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்
Image Source: istock
பின் குருணை அரிசியை போட்டு லேசாக வறுத்துவிட்டு, பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும்
Image Source: istock
அரிசி வெந்து பால் நன்கு வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்
Image Source: istock
பின் கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய்த் தூளை சேர்த்து கிளறவும்
Image Source: istock
அடுத்து, மாம்பழக் கூழை சேர்க்க வேண்டும். பின், வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்க்க வேண்டும்
Image Source: pexels-com
இறுதியாக, மேங்கோ எஸன்ஸ் சேர்த்தால் சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி. இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: freepik-com
Thanks For Reading!